விதை.
‘சன்னதி தெருல ஏதோ கூட்டம் நடக்கப்போறதா பேசிக்கறா, அந்த வழியா போகாத’
‘வடக்கு வீதி வழியா சுத்தீண்டுபோயி, மேலவாசல் தேரடி வழியா உள்ள போ!!’
‘பூஜைய முடிச்சுண்டு போன வழியாவே திரும்ப வந்துடு’
‘வழில யார் என்ன கேட்டாலும் பதில் பேசாத’
‘யாராவது எதாவது கோஷம் போட்டுண்டு போனான்னா, அந்தப் பக்கம் போகாத, திரும்பி ஆத்துக்கே வந்துடு’
‘தலைய நன்னா சீவி முடிஞ்சுண்டு, நெத்திக்கு இட்டுண்டு போ!’
‘போலீஸ்காராள பாத்தா நமஸ்காரம் சொல்லிட்டு போ. அவாள பாத்தா ஓடாத!, உங்க அப்பா மாதிரி நீயும் அடிவாங்கிண்டு வந்து படுத்துடப்போற!!’
கோவிலுக்கு புறப்பட்டுக்கொண்டிருந்த 10 வயது சிறுவன் ‘அம்பி’-க்கு அவனது அம்மா கட்டளைகளை பிறப்பித்துக்கொண்டிருந்தாள்.
நடுக்கத்துடன் புறப்பட்ட அம்பி-க்கு லேசாக வேர்க்க ஆரம்பித்திருந்தது.
வீட்டு வாசலுக்கு வந்து இருபுறமும் பார்த்தான். சன்னதி தெரு முனையில் போலீஸ் கூட்டமாக நிற்பதைப் பார்த்ததும் திரும்பி, வடக்கு வீதி நோக்கி நடக்கலானான்.
வடக்கு வீதியில், மக்கள் சிறு சிறு கூட்டமாக நின்று பேசிக்கொண்டிருந்தயும், போலீஸ்காரர்களைக் கண்டதும் அவர்கள் கலைந்து சென்றதையும் பார்த்தபடி நடந்துகொண்டிருந்தான்.
மெல்ல நடந்து, வடக்கு வீதியும் மேல வீதியும் சந்திக்கும் மூலை வந்ததும், திடீரென்று ஒரு போலீஸ் பட்டாளம் வந்து அங்கு நின்றுகொண்டிருந்தவர்களை அடித்து விரட்டத் தொடங்கியது. மக்கள் திசைக்கொருவராக ஓடத்தொடங்கினர்.
‘யாராவது எதாவது கோஷம் போட்டுண்டு போனான்னா, அந்தப் பக்கம் போகாதே’-என்று அம்மா சொன்னதை மீண்டும் ஒருமுறை நினைத்துக்கொண்டு, அம்பியும் தேரடி வாசலை நோக்கி ஓடத்தொடங்கினான்.
போலீஸ்காரர்கள் விரட்டி வந்து, கையில் பிடிபட்டவர்களையெல்லாம் தடியால் அடிக்கத்தொடங்கினர். அடிபட்டு இரத்தம் சொட்ட சொட்ட கீழே விழுந்தவர்களும் விடாமல் கோஷமிட்டுக்கொண்டிருந்ததை பார்த்தபடி அம்பி ஓடினான். அம்மா சொன்ன வார்த்தைகளை மீறி மக்களின் கோஷம் அவன் நெஞ்சில் இடம் பிடிக்கத்துவங்கியிருந்தது.
கோவில்வரை ஓடியவன் வாசலில் நின்று திரும்பிப் பார்த்தான்.
தேரடியில், தேருக்கு அடியில் சென்று ஒளிந்தவர்களை போலீஸ்காரர்கள் பூட்ஸ் காலால் மிதித்துகொண்டிருந்தார்கள். அடிபட்டும், மிதிபட்டும் மக்கள் தேரைச் சுற்றி இரைந்து கிடந்தனர். அரை மயக்க நிலையிலும் அவர்கள் வாயில் கோஷம் இன்னும் ஒட்டிக்கொண்டிருந்தது.
ஓடிவந்த மூச்சிரைக்க, கோபமும் அழுகையும் பொங்க, அடித்தொண்டையிலிருந்து, உயர்ந்த குரலில், அவனையறியாமல் ‘வந்தே மாதரம்’ என்று கோஷமிட்டான்.
இரண்டு போலீஸ்காரர்கள் கைத்தடியை ஓங்கிக்கொண்டு அம்பியை நோக்கி ஓடத்தொடங்கினர்.
அருமையான கதை. படிக்கும்போதே கதையின் காட்சிகளை மனதில் ஓடவைக்கின்றது.வாழ்த்துக்கள்.
நான் ஏதோ இனக்கலவரம்னு நினைச்சேன், நல்ல twist.
Liked the way the title is weaved into the story…subtle
Good luck!
Dear Sarav,
Very interesting and good twist. I thought it is a DK ( Dravidar Kazhagam ) meeting.
Vandhe matharam.
With Love and Regards,
B. Murali Daran.
நல்ல கதை சரவ்
ஷ்யாமி, குமாரி, முரளிதரன், நிர்மல். உங்க எல்லோருக்கும் என்னோட நன்றிகள்.
விடுதலை-ன்னு தலைப்ப பாத்தப்புறம் என்னென்ன விடுதலைகள் உனக்கு தெரியும்-ன்னு என் மனைவிய கேட்டேன்.
தேச விடுதலை(Freedom), திருமணத்திலிருந்து விடுதலை(Divorce), வாழ்க்கையிலிருந்து விடுதலை(Death), பிடிக்காத வேலையிலிருந்து விடுதலை(naukri.com), ஆண்கள் பெண்களையும் பெண்கள் ஆண்களையும்தான் கல்யாணம் கட்டிக்கணும்-ங்கற பழமைவாத(?) கட்டுப்பாட்டுல இருந்து விடுதலை(Fire), பெண்களோட மூணுநாள் தொல்லையிலிருந்து விடுதலை (Menopause)-ன்னு ஏகப்பட்ட விடுதலைகள அடுக்கிட்டாங்க.
எதப்பத்தி எழுதலாம்-னு ஒரு நாலஞ்சு நாளா மண்டைக்குள்ள ஓட்டிட்டே இருந்தப்போ, விடுதலை அடையாத சமுதாயம் எப்டி இருக்கும்-ன்னு எழுதலாமே-ன்னு ஒரு சின்ன யோசனை. அதுதான் விதை.
கதையோட ஹீரோக்களா தெரியறவங்கள(போலீஸ) வில்லன்களாகவும், வில்லன்களா தெரியறவங்கள(மக்கள) ஹீரோக்களாகவும் கடைசி வரி மாத்திடணும்-ன்னு ஒரு முயற்சி.
உங்கள் தலைப்பு பொருள் பொதிந்து இருக்கிறது.
நல்ல கதையும் விவரிப்பும். ஆனால் ஏன் அந்த பிராமன மொழி?
நன்றி நடராஜன்.
சுதந்திரத்துக்கு முன்னாடி நடந்த கதை-ன்ன உடனே பாரதி ஞாபகம் வந்தாரு. அவரு ஒரு பிராமணாளாச்சா, அதுனால அப்டியே ஒரு பிராமண குடும்பம் கதைக்குள்ள வந்துடுச்சு.
அப்பா போலீஸ்ட்ட அடி வாங்கீண்டு.., சாரி, வாங்கிட்டு வந்து படுத்திருக்கறதால, அவர் பண்ண வேண்டிய தினசரி பூஜைய செய்யதான் ‘அம்பி’ கோவிலுக்குப் போறான்.
அட !
என சொல்ல வைத்தது கதையின் முடிவு. அதுதானே ஒரு நல்ல சிறுகதைக்கு அழகு…:)
சரவ், என் கதைக்கு நீங்கள் இட்ட பின்னூட்டத்திற்க்கு மிக்க நன்றி.
உங்கள் கதை மிகவும் எளிமையாக ஒரு ஈர்ப்புடன் இருந்தது.
பாரதி நினைவுக்கு வந்ததால் ப்ராமண ந்டையில் அமைந்தது அருமையான தேர்வு.
அக்ரஹாரத்தில் நடப்பது போல் களம் அமைத்துப் படித்தால் கதைக்கு இன்னும் உயிர் வருகிறது.
நன்றி தம்பி.
நன்றி BadNewsIndia. அது என்னங்க அப்டியொரு பேரு? மெத்தனமா இருக்காதீங்க-ன்னு சொல்ல இப்டி ஒரு பேரு வெச்சுக்கணுமா? BeAlertIndia மாதிரி வெச்சுக்க கூடாதா?
ஹஹா. நல்ல கேள்வி.
catchy யா இருக்கட்டுமே னு வெச்சேன்.
ஊர்ல நடக்கும் கசப்பான விஷயங்களை சொல்றதால பொருத்தமாவும் இருக்கும்.
அன்புள்ள சரவணனுக்கு,
கண்டிப்பாக கதை ஒரு நல்ல முயற்சி, நல்ல விசயத்தை எனக்கு முன்னாடி எல்லோரும் கருத்தா சொல்லிட்டதால, நான் செம்மங்குடியா மாற வேண்டிருக்கு.
முதல் பத்து வரியிலே எத்தனை “போ” இருக்குன்னு போட்டியே வைக்கலாம். கதையோட உரைநடையும் உரையாடலும் வெவ்வெறு
பாஷையிலே இருக்கு.
“போலீஸ்காராள பாத்தா நமஸ்காரம் சொல்லிட்டு போ.” ( இது உரையாடல்)
அவனது அம்மா கட்டளைகளை பிறப்பித்துக் கொண்டிருந்தாள். (இது ஆசிரியரோட எழுத்தாக்கம்)
உரைநடையும் உரையாடலும் ஒத்து இருக்க வேணும்னு சட்டமில்லை என்றாலும், கதையோட களம் வேற காலம் (பாரதி)
1. கோவிலுக்கு புறப்பட்டுக்கொண்டிருந்த 10 வயது சிறுவன் ‘அம்பி’-க்கு அவனது அம்மா கட்டளைகளை பிறப்பித்துக்கொண்டிருந்தாள்.
2. நடுக்கத்துடன் புறப்பட்ட அம்பி-க்கு லேசாக வேர்க்க ஆரம்பித்திருந்தது.
“புறப்பட்டு” – “புறப்பட்ட” – ஏன்? பத்து (10?) வயது என்றாலே சிறுவன் தான் (இது வாசகருக்கான வசதியா?)
லேசாக வேர்க்க ஆரம்பித்திருந்தது – ( வேர்க்க – இதை தவிர்த்து இருக்கலாம் – என் தனிப்பட்ட கருத்து – சில சமயம் வாசகரோட கற்பனை குதிரைக்கு கடிவாளம் போட கூடாதென்பது என் எண்ணம் – நடுக்கத்தோட விட்டிருந்தா – நான் சிறுவனுடைய கை/கால் உதறுவதாகவோ முட்டைக் கண் முழிப்பதாகவோ, என் கற்பனைக்கு விட்டிருக்கலாம், வேர்க்க – தடுத்து விட்டது)
கோவில்வரை ஓடியவன் வாசலில் நின்று திரும்பிப் பார்த்தான். (இது பத்தியா? (அ) சொற்றோடரா?? – துண்டாக தனியாக இருக்கின்றது)
சில எழுத்து பிழைகள்:
(இதை கூறுவதற்கு காரணம்: நீங்கள் போட்டியில்
கலந்து கொள்வதால்)
இரு புறமும் – இருபுறமும்
பார்த்தும் திரும்பி – பார்த்ததும் திரும்பி
களைந்து – கலைந்து
சந்திக்கும் மூளை – சந்திக்கும் மூலை
வார்த்தைகளை மீறி – வார்த்தைகளையும் மீறி
கோஷமிடுக் கொண்டிருந்ததை -கோஷமிட்டுக் கொண்டிருந்ததை
சொட்டச் சொட்ட – சொட்ட சொட்ட (இரட்டை கிளவி)
இது என் விமர்சனம் மற்றபடி குறை கூறும் எண்ணம் கிடையாது!, உங்கள் முயற்சி வெற்றியடையும் என்பது வெள்ளிடைமலை!!
நன்றி,
சிவா
வருகைக்கும் கமெண்ட்டுகளுக்கும் சிவா!!
நீங்க சுப்புடுவா மாறி நெறைய சொல்லிருக்கீங்க.
* இதே கதைய நான் எத்தனைமுறை படிச்சாலும் எழுத்துப் பிழைகள் என் கண்ணுக்கு தெரிஞ்சிருக்காது. ‘பார்த்தும் திரும்பி’-ங்கறத எத்தனை தடவ படிச்சிருந்தாலும் ‘பார்த்ததும் திரும்பி’-ன்னுதான் படிச்சிருப்பேன். எழுத்துப் பிழைகள பாத்து சொன்னதுக்கு நன்றி. அவைகள திருத்திட்டேன். “வார்த்தைகளை மீறி – வார்த்தைகளையும் மீறி” தவிர. ‘வார்த்தைகளை மீறி’-ங்கறதே கதையோட்டத்துக்கு உதவுது-ன்னு நெனைக்கறேன். அப்டி எழுதறது தப்பா என்ன?
* முதல் பத்து வரில வர்ற அத்தனை ‘போ’க்கள் வெளில நடக்கற நிகழ்வுகளைப் பத்தி அம்பியோட அம்மாவோட பயத்தையும், அம்பி மேல அவங்க அம்மாக்கு இருக்கற அக்கறையையும் காட்டுது. கதைல ஒரு சூட்டோட (அ) சஸ்பென்ஸ்ஸோட ஆறம்பிக்கறதுக்கும் அது உதவுச்சுன்னு நெனைக்கறேன்.
* ‘அம்பி நடுக்கத்துடன் புறப்பட்டான்’-ங்கறதோட
‘நடுக்கத்துடன் புறப்பட்ட அம்பி-க்கு லேசாக வேர்க்க ஆரம்பித்திருந்தது’-ங்கறது அவனோட பயத்த இன்னும் அதிகமா காட்டுதுன்னுதான் நெனைக்கறேன்.
‘சில சமயம் வாசகரோட கற்பனை குதிரைக்கு கடிவாளம் போட கூடாதென்பது என் எண்ணம்’-ன்னு நீங்க சொல்றது சரிதான். ஆனா, ‘வேர்க்க ஆரம்பித்திருந்தது’-ன்னு சொன்னது ஏன் உங்க கற்பனைக்கு கடிவாளம் போட்டுது-ன்னு தெரியல.
லேசாக வேர்க்கற ஒரு சிறுவனுக்கு கால் நடுக்கம் வராதா? இல்ல திருட்டு முழி முழிக்க முடியாதா!?
* கோவில்வரை ஓடியவன் வாசலில் நின்று திரும்பிப் பார்த்தான். (இது பத்தியா? (அ) சொற்றோடரா?? – துண்டாக தனியாக இருக்கின்றது)
Oops!! பத்தி? சொற்றொடர்? இவ்ளோ உண்ணிப்பா பாத்துருக்கறீங்க?
இரண்டு பத்திக்கும் இடைல சொல்லவேண்டிய ‘அம்பி’யோட நிலை. அவ்ளோதான் நான் பாத்தது. கதைக்கு நடுல இப்டி ஒரு வரில ஏதும் வரக்கூடாதா? இலக்கணப் பிழையா?
* ‘புறப்பட்டுக்கொண்டிருந்த’ வர்ற எடத்துல அம்பி தலை சீவி, உடை போட்டு தயாராகிட்டு இருந்தான். ‘புறப்பட்ட’-ன்னு வர்ற எடத்துல புறப்பட்டுட்டான்.
* கதைய சொல்ற நான் பேசற பாஷையும் கதைல வர்ற பாத்திரங்கள் பேசற பாஷையும் வேற வேறதான் சிவா.
மத்தபடி நீங்க சொன்னதயெல்லாம் அடுத்த சிறுகதை முயற்சில சரி செஞ்சுடறேன்!!
அன்புள்ள சரவணனுக்கு,
* “வார்த்தைகளை மீறி – வார்த்தைகளையும் மீறி” தவிர. ‘வார்த்தைகளை மீறி’-ங்கறதே கதையோட்டத்துக்கு உதவுது-ன்னு நெனைக்கறேன். அப்டி எழுதறது தப்பா என்ன?
—————
தப்பில்லை சரவணன், அதை பிழையுன்னு சொன்னது பிழை. ஒரு சுவையுட்டம் , ஒரு அழுத்தம் அவ்வளவு தான்:
“அதை மீறி செஞ்சுட்டேன்” – “அதையும் மீறி செஞ்சுட்டேன்” (இந்த யும் சொல்லும் போது புருவத்தை உயர்த்தும்)
—————–
* முதல் பத்து வரில வர்ற அத்தனை ‘போ’க்கள் வெளில நடக்கற நிகழ்வுகளைப் பத்தி அம்பியோட அம்மாவோட பயத்தையும், அம்பி மேல அவங்க அம்மாக்கு இருக்கற அக்கறையையும் காட்டுது. கதைல ஒரு சூட்டோட (அ) சஸ்பென்ஸ்ஸோட ஆறம்பிக்கறதுக்கும் அது உதவுச்சுன்னு நெனைக்கறேன்.
—————–
ஒரு வேளை நான் சரியா சொல்லலைன்னு நினைக்கிறேன். 200 வார்த்தையிலே சிறுகதைன்னா தொடர்ச்சியா சில வார்த்தைய மட்டும்
அதிகமாப் பிரயோகம் செய்யாமே அவ்வார்த்தையோட synonymsஐ இறக்கியிருக்கலாம், அதுவும் தேவைப்பட்டா.
சரி, எத்தனை முறை “போ, வீதி, வழி, போலீஸ், கோவில்” – நீங்கள் முயற்சி செய்தால் 1 (அ) 2 முறைக்கு மேல் இவ்வார்தைகளை
கட்டுப்படுத்த முடியாதா என்ன?
———————
*ஆனா, ‘வேர்க்க ஆரம்பித்திருந்தது’-ன்னு சொன்னது ஏன் உங்க கற்பனைக்கு கடிவாளம் போட்டுது-ன்னு தெரியல.
லேசாக வேர்க்கற ஒரு சிறுவனுக்கு கால் நடுக்கம் வராதா? இல்ல திருட்டு முழி முழிக்க முடியாதா!?
——–
எனக்கு கற்பனா சக்தி கம்மியா போச்சு
———
* கதைக்கு நடுல இப்டி ஒரு வரில ஏதும் வரக்கூடாதா? இலக்கணப் பிழையா?
——-
அப்படியில்லை, what the boy act is a present continuation, “கோவில்வரை ஓடியவன் வாசலில் நின்று திரும்பிப் பார்த்தான். ”
so it had to come in the second para starting, in all places you have your sentences in correct வீச்சு except this line.
தேரடியில், தேருக்கு அடியில் சென்று ஒளிந்தவர்களை போலீஸ்காரர்கள் பூட்ஸ் காலால் மிதித்துகொண்டிருந்தார்கள்.
(this line is an visual continuation of the previous one, thats why I told துண்டாக தெரியுதுன்னு..
——–
நன்றி,
சிவா
[...] ‘வழில யார் என்ன கேட்டாலும் பதில் பேசாத’ மேலும் படிக்க இங்கே கிளிக் [...]
[...] சரவ் -ன் கதை – விதை [...]
Nalla siru Kadhi.
AsokaMitran sayal iruku.
Vallthukkal.
Mani
kathai nalla irukku aana ippa intha kathai thevai thaana?
Ramamoorthy, Thanks for visiting. Ithu ‘Viduthalai’-nggaRa thalaippula nadaththappatta poottikku ezuthina kathai.
Miha nalla Kathai… Kathai mattum alla, atharkku siva vin vimarsanam, thangal pathiluraigal, anaithu padikka, rusikka nanraha irunthathu…
Vaazhthukkal….
Anbudan,
Krishh…
(Anandhakrishnan)
Nice one. Exploring your blog more. Very Interesting.
NALLA KATHAI VARIKAL PURIAMMAL PURINTHUVINDUKIRANNA
KATHAI KALIN VARIKALI MARRAVUM
ந்ல்லகதை. கதை படித்து முடித்ததும் வருகின்ற உணர்வுக்கு முன்னால் எழுத்துப்பிழை, நடையில் தொய்வு என்பதெல்லம் பெரிய விஷயம் இல்லை.பாராட்டுக்கள்.