நாக்குக்கு நான் அடிமை.

நாம சாப்டற சாப்பாடு பத்தியும், அத பண்ண நாம் பயன்படுத்தற பொருட்கள் பத்தியும், நாம சாப்டற சாப்பாடு உடம்புக்குள்ள போயி என்னென்ன செய்யுது-ங்கறத பத்தியும் நான் படிச்சு தெரிஞ்சுகிட்டத சில பதிவுகளா எழுதலாம் ஆரம்பிக்கறேன்.

உடல் எடைய பத்தியும், உள்ள போற ஓவர் சாப்பாடு எப்டி இடுப்புல சேர்ந்து மொதல்ல சைக்கிள் டயராகி, மெதுவா பைக் டயராகி, பஸ் டயராகி, அப்புறம் எப்படி ட்ராக்டர் டயராகுது-ன்னும் படிச்சு பதிவலாம்-ன்னு பாக்கறேன்.

சர்க்கரை நோய் ஏன், எப்டி வருது-ங்கறது பத்தியும், அத எப்டி ஓட ஓட(ஓடி ஓடி) வெறட்டலாம்கறதையும் கொஞ்சம் பாத்துடுவோம். ரொம்ப பயலாஜிக்கலா சொல்லி பய லஜிக்கா ஆக்கிட்டா திரும்ப படிக்கும்போது எனக்கே கொஞ்சம் பயமாயிடும். அதுனால ரொம்ப ஆழமா, முத்து எடுக்குற அளவுக்கு போகாம, கரைலயே உக்காந்து மீன் பிடிக்கற அளவுக்கு பாப்போம்.

Bodyமொதல்ல நம்ம உடம்புங்கற மெஷின் எப்டி வேல செய்யுது-ங்கறதுல ஆரம்பிப்போம். நாம ஒரு பைக் வெச்சிருந்தா அதுக்கு பெட்ரோல் போடறோம். ஆக்ஸிலேட்டர திருகினா பெட்ரோல் எரிஞ்சு அதுல இருந்து ஒரு சக்தி உருவாகி அந்த சக்தி பைக்க ஓடவைக்குது. அது மாதிரி நம்ம உடம்பு வேல செய்ய என்ன தேவைப்படுது? ஈசியா பதில் சொல்லிடலாம். சாப்பாடு.

ஆனா, சாப்பாடு எப்டி சக்தியா மாறுது?

நாம சாப்டற சாப்பாடு, புளியோதரையா இருந்தாலும் சரி, சிக்கன் பர்கரா இருந்தாலும் சரி, ச்சீஸ் பிஸ்ஸா-வா இருந்தாலும் சரி வயித்துக்குள்ள போயி மொதல்ல கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுக்குது. வாயில சாப்பாட மெள்ள ஆரம்பிச்சதுல இருந்தே, வாயிலயும், வயித்துலயும் அமிலங்கள் சுரக்க ஆரம்பிக்குது. அமிலங்கள்னா சயின்ஸ் லேப் இருக்குற மேட்டரோ, துள்ளாத மனமும் துள்ளும் படத்துல சிம்ரன் அக்கா கண்ண பொசுக்கிடற மேட்டரோ இல்ல. அம்மா சாம்பார் தாளிக்கும்போதும், பெண்கள் கல்லூரி வாசல்ல நின்னு இயற்கைய ரசிக்கும்போதும் வருதே ‘ஜொள்ளு’ அதுவும் அமிலம்தான்.

அந்த அமிலங்களோட சேர்ந்து, கரைஞ்சு, சாப்பாடு மெதுவா, வயித்துல இருந்து குடலுக்குள்ள போகுது. குடல் சாப்பாட்ல இருக்குற, சத்துகள பிரிச்சு உடம்புக்கு கொடுக்க உதவுது. குடல்தான் நாம சாப்டற சாப்பாட்டுல இருந்து முக்கியமான ரெண்டு சத்த பிரிச்சு உடம்புக்கு கொடுக்குது. ஒன்னு சக்கரைச் சத்து (க்ளுக்கோஸ்), ரெண்டாவது கொழுப்புச் சத்து.

அடுத்து வருவது..
கார கொழம்புல சக்கரைச் சத்து எங்க இருக்கு?
கலோரின்னா என்னண்ணே!!??
ஆமா!! டயர் எப்டி உருவாகுது?
..
..