சோலா பூரியும் கலோரியும்.

நாம சாப்டற சாப்பாட்லயும் சரி, வண்டில போடற பெட்ரோல்லயும் சரி நெறைய கலோரி சக்தி இருக்கு. அந்த சக்திதான் வண்டிய ஓட்டுது. நம்ம ஒடம்பயும் இயக்குது.

ஒரு லிட்டர் பெட்ரோல்ல, சுமாரா 1,00,00,000 கலோரி இருக்கு. அதாவது 1,00,00,000 கிராம் தண்ணியோட சூட்ட ஒரு டிகிரி (1,00,00,000- டிகிரி இல்ல? ;) ) உயர்த்தற அளவுக்கு சக்தி இருக்கு. 1,00,00,000 கிராம்-ங்கறது 10,000 கிலோ கிராம் தண்ணி. 1,00,00,000 கலோரி-ங்கறது 10,000 கிலோ கலோரி.

பெட்ரோல் சரி, சாப்பாட்ல?
அமெரிக்கால எல்லா சாப்பாட்டு ஐட்டங்கள்லயும், அதுல எவ்ளோ கலோரி இருக்குன்னு போட்றுப்பாங்க. நம்ம ஊர்லயும் இப்போல்லாம் போட ஆரம்பிச்சுட்டாங்க. ஒரு டின் கோக்ல 140 கலோரி, பதப்படுத்தி குளிர்சாதனப்பெட்டில வெச்சிருக்கற மசால் தோசைல, 250 கலோரி-ன்னும் போட்டிருப்பாங்க. பத்து கப் ஐஸ் க்ரீம் இருக்குற ஒரு டப்பால ஒரு கப் ஐஸ் க்ரீம்-ல 150 கலோரி-ன்னும் போட்டிருப்பாங்க.

விஷயம் என்னன்னா, அதெல்லாம் கலோரி இல்ல. கிலோ கலோரி. ஒரு டின் கோக்-ல 140 கிலோ கலோரி. அதாவது 140,000 கலோரி. ஈசியா சொல்றதுக்காக கலோரி-ன்னு போட்டுக்கறாங்க. கிலோ கலோரி-ய சாப்பாட்டு கலோரி (Food Calorie)-ன்னும் சொல்றாங்க. அதுனால 140 சாப்பாட்டு கலோரி-ன்னு ஈசியா சொல்லிக்கறாங்க.

கோக்-ல 140 கிலோ கலோரி சரி, ஆனியன் ரவா மசாலா தோசைல? சோலா பூரில?
நல்லா மொறு மொறு-ன்னு பொன் நிறமா பண்ணின வசந்த பவன் ஆனியன் ரவா மசாலா தோசைல (சட்னி சாம்பார் இல்லாம :) ) சுமாரா ஒரு 700 கிலோ கலோரி இருக்கும். சோலா பூரில இருந்து கடைக்கற 800 கிலோ கலோரியையும் குருமால ஒரு 400 கிலோ கலோரியையும் அப்டியே எடுத்து ஒரு பைக்ல போட்டா, அது ஒரு பத்து கிலோ மீட்டர் ஓடும்.

கடைல சாப்டற ரவா தோசைலயும் சோலா பூரிலயும் இவ்ளோ கலோரி இருக்கு சரி, வீட்ல பண்றதுல, அம்மா கையால சமைக்கறதுல, Fortune-லசமைக்கறதுல?
கடைல சமைச்சாலும் சரி, வீட்ல சமைச்சாலும் சரி, தோசை தோசைதான். பூரி பூரிதான். Fortune-ஆ இருந்தாலும் சரி, Sun Drop-ஆ இருந்தாலும் சரி, எண்ணை எண்ணைதான். கொழுப்புச் சத்து கொஞ்சம் கம்மியா இருக்கலாமே தவிர, சுத்தமா இல்லாம இருக்காது.

ஒரு கிராம் சர்க்கரைச் சத்துல – கார்போஹைட்ரேட்ல – 4 கிலோ கலோரி இருக்கு.
ஒரு கிராம் புரதச் சத்துல – ப்ரோட்டீன்ல – 4 கிலோ கலோரி இருக்கு.
ஒரு கிராம் கொழுப்புச் சத்துல – Fat ல – 9 கிலோ கலோரி இருக்கு.

Siru Kudalசிறுகுடலுக்கு சாப்பாடு வந்தப்புறம், வயிறுல சுரக்கற அமிலங்களோட உதவியால, இந்த சத்துகள சிறுகுடல் பிரிச்சு, ரத்தத்துல கலந்து உடம்போட எல்லா பாகங்களுக்கும் அனுப்புது. தேவைப்படும்போது தேவையான அளவு சக்திய, உடம்போட பாகங்கள் எடுத்துகுது. நாம நடக்கும் போதும் ஓடும்போதும், கையும் காலும், ரத்தத்துல வர்ற சர்க்கரை சத்துல இருந்து சக்திய எடுத்துகுது. குளிர்ல நடுங்கும்போது கொழுப்புச் சத்துல இருந்து சக்திய எடுத்து உடம்பு தன்ன சூடா வெச்சுக்குது. உடற்பயிற்சி செய்யும்போது, உடம்புல இருக்கற சதை புரதச் சத்துல இருக்குற சக்திய எடுத்துகிட்டு சதைய பலப்படுத்துது. நாம தூங்கும்போது கூட, மூச்சு விடறதுக்கும், ரத்தத்த எல்லா உடல் பாகங்களுக்கும் அனுப்பறதுக்கும் இந்த சக்திகள் பயன்படுது.

வயிறு முட்ட சாப்டுட்டு, தூங்கிட்டா, இந்த சத்துகள் எல்லாம் ரத்தத்தோட சேர்ந்து உடம்பு ஃபுல்லா ஓடிட்டு வந்து, களைச்சுபோயி, வயித்துக்கு பக்கத்துலயே படுத்துக்குது. இது மாதிரி நெறைய சத்துகள் வந்து வயித்துக்கு பக்கத்துலயே படுத்துக்கறதுனால, நாம வாங்கற பேண்ட்டுகள் பத்தாம போய்டுது.

அடுத்து வருவது.
இதெல்லாம் சரின்னே!! ஒரு நாளைக்கு நம்ம உடம்புக்கு எவ்ளோ கலோரி வேணும்?
சுகர் ஏன் வருது? சுகர் இருக்கறவங்க ஏன் அரிசி சோறு கொஞ்சமா சாப்டணும்?