மன்னார்குடி கலகலக்க..

போன வாரம் என் தம்பி புதுசா வாங்கியிருக்குற தீப்பெட்டியைவிட சின்ன iPod-அ எடுத்துகிட்டுபோயி ஆபீஸ்ல எல்லோருக்கும் சும்மா படம் காட்டிட்டு இருந்தேன். திரும்பி வரும்போது ட்ரெயின்-க்காக காத்துகிட்டு இருந்தப்போ இந்த பாட்ட கேட்டேன். சிவப்பதிகாரம் படத்துல வர்ற ‘மன்னார்குடி கலகலக்க’ பாட்டு.
கிராமத்து பாட்டுன்னாலே எனக்கு ரொம்ப பிடிச்சிடும். கால் தானா ஆடும். அப்படி ஒரு பாட்டு பிடிச்சிருச்சின்னா திரும்ப திரும்ப அதே பாட்டேதான் ஓடிட்டு இருக்கும். அதுமாதிரி ட்ரெயின்ல ஏறினதுல இருந்து வீடு வந்து சேர்ற வரைக்கும் இந்தப் பாட்டுதான் ஓடிச்சு.

பாட்ட பாடியிருக்கற பெண் பாடகியோட (ராஜலக்ஷ்மி) குரல் அவ்ளோ பிடிச்சிருச்சு. வித்யாசாகர் இசையும் சூப்பர்.

நீங்களும் கேளுங்க..
[audio:http://sarav.net/wp-content/Mannarkudi-Kalakala.mp3]