இந்த வாரம் பார்த்த திரைப்படங்கள்.

புதுசா வீடு மாறி வேற வீட்டுக்கு வந்திருக்கேன். புதுவீட்டுக்கு பக்கத்துலயே வீடியோ ரெண்டல் கடை இருக்கு. நாலு நாள் லீவுல வீட்ல உக்காந்து சில படங்கள் பார்த்தேன். சில ஆங்கில படங்கள், ஒரு தமிழ் படம். நான் சினிமா பாக்கறது இப்பொல்லாம் கொஞ்சம் மாறியிருக்கு. சினிமால கதைய எப்டி சொல்றாங்க-ன்னு கொஞ்சம் கவனிக்கறேன். விருமாண்டி, Memento (கஜினியோட ஆங்கில முன்மாதிரி), Fight Club மாதிரி படங்களோட பாதிப்பு-ன்னுகூட சொல்லலாம்.

இந்த வாரம் பார்த்த படங்கள்ல முக்கியமா சொல்ல வந்தது ப்ரூஃப் (Proof)-ங்கற படம். ஒரு கணித மேதை, அவரோட ரெண்டு பொண்ணுங்க (ரெண்டாவது பொண்ணுதான் ஹீரோயின்), அவரோட அஸிஸ்ட்டண்ட் மாதிரி வர்ற இன்னொரு கணித ஆசிரியர்(ஹீரோ)-ன்னு படத்துல முக்கியமான பாத்திரங்கள் 5, 6 பேர்தான். அவங்களுக்குள்ள நடக்கற உணர்வுப்பூர்வமான கதைய ஒன்னரை மணி நேரத்துல சூப்பரா சொல்லியிருக்காங்க.

அடுத்ததா Click. ஆடம் சாண்ட்லரோட படம். வாழ்க்கைல வர்ற கஷ்டங்களையெல்லாம் போக்கறதுக்கு, நம்ம இஷ்டத்துக்கு மாத்திக்கிறதுக்கு வசதியா ஒரு யுனிவர்சல் ரிமோட் கடைக்குது கதையோட ஹீரோக்கு. வீட்டு நாய் சத்தமா கொளைக்கும் போது வால்யூம் கம்மி பண்றதுக்கும், தலைவலி வரும்போது பாஸ்ட் பார்வோர்ட் பண்றதுக்கும் வசதியா இருந்தா எப்டி இருக்கும்-ன்னு சொல்ற கதை. பாட்டு, சண்டை இல்லையே தவிர, தமிழ் படத்துக்கான எல்லா தகுதிகளும் இருக்குற படம்.

அடுத்து MI3. நல்ல மசாலா படம். குருதிப்புனல் படத்த அங்கங்க ஞாபகப்படுத்துது.

தமிழ்ப் படம், ஈ. ஆங்கிலப் படங்களுக்கு கொஞ்சம்கூட கொறையாத நல்ல தமிழ்ப்படம். கதைய நகர்த்திட்டு போற விதம் ரொம்ப நல்லா இருந்துது. நல்ல நடிகர்கள், திறமையான நடிப்பு-ன்னு ரசிச்சு பாக்க முடிஞ்சுது.

நாளைல இருந்து திரும்ப ஆபீஸ்க்கு போகணும். ரெண்ட் பண்ண DVD-களையெல்லாம் திரும்ப கொடுக்கணும். நெறைய வேலை இருக்கு.

இப்போதைக்கு பை பை.