இன்று புதிதாய் பிறந்ததுபோல் மகிழ்ச்சி.

ஒவ்வொடு தடவை இந்தியன் ரெஸ்டாரண்ட்-க்கு போயி சாப்ட்டுட்டு வந்தப்புறமும் ஒரு கில்டி ஃபீலிங்(Guilty Feeling) (அ) குற்ற உணர்வு இருக்கும். ஓவரா சாப்ட்டுட்டேன்-ங்கற உணர்வு. எந்த ஹோட்டலுக்கு போனாலும் ஒரு ரெண்டு மூணு ஐட்டங்களாவது பிடிச்சதா இருக்கும். அதுல ரெண்டாவது சாப்ட தோணும். மசால் தோசை, ரவா தோசை, பரோட்டா, சில்லி பரோட்டா, பூரி, சோலா பூரி, தாளி(அளவு சாப்பாடு) இப்டி லிஸ்ட் பெரிசா இருக்கும். ஐஸ் க்ரீம், ஃப்ரூட் சாலட் தனி. சாப்ட்டு முடிச்சு வெளில வர்ற வரைக்கும் கலோரி கணக்கோ, எனர்ஜி கணக்கோ தோனவே தோனாது.

ஒவ்வொரு தடவையும், என்னவோ அதுதான் கடைசி தடவையா அந்த ஹோட்டல்ல போயி சாப்டற மாதிரி எல்லாத்தையும் சாப்ட தோணும். அதுலயும் பக்கத்து டேபில்ல உக்காந்து இருக்கறவங்க சாப்டற ஐட்டத்த பாத்தா, அடடா.. எதிர் டேபில்ல இருக்குற ஆளுங்க சாப்டற சோலா பூரிக்கும், பக்கத்து டேபில்ல இருக்குற ஆளுங்க சாப்டற ஐஸ் க்ரீமுக்கும் எப்பவுமே சுவை அதிகம்தான்.

இந்த வாரம் இந்தியன் ஹோட்டலுக்கு போனேன். உள்ள போகும்போது கண்ணு தானா தேடுச்சு. மத்த டேபில்ல என்ன சாப்டறாங்க-ன்னு. ஒருத்தர் தாளி சாப்டுட்டு இருந்தார். அப்பளத்த பாத்தொன்ன, அடடா, இன்னிக்கு நாமும் தாளிதான்னு நெனைச்சேன். அடுத்த டேபில்ல பிஸிபேளாபாத். அடடா, இத சாப்டா என்ன? உக்காந்தொன்ன பாத்தா பக்கத்து டேபில்ல பொங்கல் வடை. அடடடா!! பொங்கல் வடை சாப்டுகூட ரொம்ப நாளாச்சே!! மெனுவ பிரிச்சு பாத்தொன்ன வெஜிடபுள் பிரியாணி வேற கண்ண உறுத்துச்சு.

வெயிட்டர் வந்து என்ன சாப்டறீங்கன்னு கேட்டப்போ, எனக்கு நானே சொல்லிகிட்டேன். ‘இந்த ஹோட்டல்ல நாம சாப்ட போறது இதுவே கடைசி தடவ இல்ல. பிஸிபேளாபாத்தும் பொங்கல் வடையும் நாளைல இருந்து கெடைக்காமலே போயிட போறதில்ல’.

ஒரு மசால் தோசை ஆர்டர் பண்ணினேன். ருசிச்சு சாப்டேன். வெயிட்டர் வந்து வேற என்ன வேணும்-ன்னு கேட்டப்போ, எனக்கு இது ஞாபகம் வந்துச்சு.
தேவைக்கு அதிகமா கலோரி உள்ள போகாம எப்டிதான் தடுக்கறது?
சிம்பிள். ரொம்ப ஈசியான ஒரு வழி இருக்கு. தலைய ஆட்டணும். இடதுல இருந்து வலதா, அப்புறம் வலதுல இருந்து இடதா. ரெண்டு மூணு தடவ ஆட்டணும். அவ்ளோதான். காலை, மதியம், நைட்டு-ன்னு, ஒரு நாளைக்கு மூணு தடவை ஆட்டணும். ஆனா, சாப்டும்போது ஆட்டணும். சாப்பாடு போடறவங்கள பாத்து ஆட்டணும்.

அவர பாத்து, லேசா சிரிச்சுகிட்டே, தலைய ஆட்டினேன். இடதுல இருந்து வலதா, அப்புறம் வலதுல இருந்து இடதா. ரெண்டு மூணு தடவ. :)

‘சரியான கிறுக்கனா இருக்கான். வேற ஏதும் வேண்டாம்-னு சொல்றதுக்கு எதுக்கு சிரிக்கறான்’னு நெனைச்சாலும் நெனைச்சிருப்பாரு வெயிட்டர்.

இருந்தாலும், சாப்ட்டுட்டு வெளில வரும்போது வழக்கமான கில்ட்டி ஃபீலிங் மிஸ்ஸிங். :)

அடுத்ததா பாடி மாஸ் இண்டெக்ஸ் பத்தி சொல்ல வந்தேன். ஹோட்டல் கதை சொல்றதுக்கே ஒரு பதிவு ஆயிடுச்சு. பாடி மாஸ் இண்டெக்ஸ் பத்தி அடுத்த பதிவுல பார்ப்போம்.