இந்தியாவில் இருந்து..

வணக்கம்! வந்தனம்!! சுஸ்வாகதம்!!! Welcome to Sarav.net.

இந்தியா வந்துட்டேன். சென்னை வாசியா ஆகப்போறேன். இப்போதைக்கு எங்க கிராமத்துல இருக்கேன். அடுத்த மாசத்துல இருந்து சென்னைவாசி.

Chennai is going thru a huuuuuuuge revolution. (இத எப்டி தமிழ்ல சொல்றது?) திரும்ப சென்னை வந்தப்புறம் போட்டோ பிடிச்சு போடறேன். எங்க போனாலும் புதுப்புது கட்டிடங்களுக்கான கட்டுமான வேலை நடக்குது. புதுப்புது ஹை ரெய்ஸ்ட் அப்பார்ட்மெண்ட் காம்ப்ளெக்ஸ், I T பார்க்குகள். மூணு மாடி நாலு மாடிகள்லாம் இப்போ ஓல்ட் ஃபாஷன். 25 இல்ல 30 தான் இப்போ ஃபாஷன்.

இன்னும் மூணு வருஷம் கழிச்சுதான் நீங்க சென்னை வர்ற மாதிரி ப்ளான் இருந்துச்சுன்னா, சென்னைய உங்களுக்கு அடையாளம் தெரியாது. விமான நிலையத்தகூட உங்களுக்கு அடையாளம் தெரியாது.

இன்னும் மூனு வருஷம் கழிச்சு சென்னைல ஒரு வீடு வாங்கலாம்-ன்னு நெனைச்சுகிட்டு இருந்தா அதையெல்லாம் மறந்துடணும் போல இருக்கு. தினம் தினம் வெலை ஏறுது. ஏணிப்படிலகூட இல்ல, ராக்கெட்ல ஏறுது.

அதேமாதிரி இன்வெஸ்மெண்ட்-க்கு ஏகப்பட்ட வாய்ப்புகள். ING Direct-ல 3% வட்டிக்கு பணம் போட்டிருந்தா இன்னொரு முறை யோசிங்க. இந்தியால 13% வளர்ச்சியெல்லாம் சாதாராணமா இருக்கு.

எல்லாத்தையும் விபரமா சென்னை வந்தப்புறம் சொல்றேன்.

இப்போதைக்கு bye bye.