இறைவழி – நல்வழி.

6:160. நாம் மற்றவர்களுக்கு ஒரு நன்மை செய்யும்பொழுது, இறைவன், நமக்கு பல மடங்கு நன்மையைச் செய்கிறான். அதேபோல், நாம் செய்யும் தீமைகளைப்போல் பன்மடங்கு தீமைகளை நமக்கு அளிக்கிறான்.

6:161. இறைவனை நம்புபவர்களுக்கு/வழிபடுபவர்களுக்கு அவன், மிக்க உறுதியான, நல்வழியையே காட்டுகிறான்.

6:162. நமது பிறப்பு, வாழ்வு, செல்வம், இறப்பு என அனைத்துமே இறைவனுடையது.

6:163. நமக்கு நல்வழி காட்டுவதில், இறைவனுக்கு நிகர் வேறெவரும் இல்லை.

6:164. இறைவன் காட்டும் நல்வழியிலிருந்து விலகிச் செல்பவர்கள், அவன் பார்வையிலிருந்து விலகிச் செல்ல முடிவதில்லை. அப்படி விலகிச் செல்பவர்கள், தமக்குத்தாமே கேட்டை விளைவித்துக்கொள்கிறார்கள்.