எவ்ளோ நாள் லீவு?

‘வாங்க தம்பி, எப்போ வந்தீங்க? எத்தனை நாள் லீவுல வந்திருக்கீங்க?’

‘சார், நல்லா இருக்கீங்களா, ஒரு மாசம் லீவா?’

‘என்னப்பா நல்லா இருக்கியா? திரும்ப எப்போ போற?’

‘கொஞ்ச நாள் இருப்பியா-ப்பா??’

இதெல்லாம் என்னை பாக்கறங்க கேக்கற கேள்விகளோட சாம்பில். ஒருத்தர் ரெண்டு பேரு இல்ல. நான் பாக்கறவங்க எல்லோரும் இதே மாதிரி கேள்விதான். நான் எப்போ திரும்ப போறேன்-ங்கறதுல அவ்ளோ ஆர்வம்.

சில பேர்ட விளக்கமா சொல்றேன். சிலர்ட ‘ஆமாங்க, ஒரு மாசம் லீவு’-ன்னு சொல்லிட்டு எஸ்கேப் ஆய்டறேன்.