மெல்லப் ‘புடவை’ இனிச் சாகும்!!

சென்னைல இருந்து எங்க கிராமத்துக்கு போகும் போதும், எங்க ஊருக்குப் பக்கத்துல இருக்குற கிராமங்கள் வழியா போகும் போதும் சுத்திலும் இருக்குற கிராமங்கள்ல இருக்குற மக்களையும், அவங்க வீடுகளையும், லைஃப் ஸ்டையிலயும் பாத்துகிட்டே போறேன். பஸ்ல போகாம, கார்லயோ, பைக்லயோ போறதுனால இந்த கிராமங்கள கொஞ்சம் நோட்டம் விட முடியுது.

இந்த கிராமங்கள்ல நெறைய விஷங்கள பாக்க முடியுது. மாறாத கிராமத்து மணமும், மாறியிருக்குற ஃபாஷன் மணமும் கலந்து வீசறத கவனிக்கலாம். இன்னமும் கரண்ட் கனெக்ஷன் இல்லாத வீடுகள், வாசல்ல உக்காந்து ரேடியோ கேக்கற வீடுகள், தெருவெல்லாம் புகைய பரப்புற அடுப்புகளுக்கு முன்னாடி உக்காந்திருக்குற இல்லத்தரசிகள், ஒரு சின்ன எடத்த ரெண்டா பிரிச்சு ஒரு கிச்சன் ஒரு மல்ட்டி பர்ப்பஸ் ரூம்னு பிரிச்சு இருக்கற வீடுகள், அந்தச் சின்ன ரூம்லயும் ஒரு டிவி இருக்கற வீடுகள், வீட்டு வாசல்ல நின்னு மொபைல் ஃபோன்ல குடும்பப் பிரச்னைகள பேசீட்டு இருக்கற அக்காக்கள்-ன்னு நெறைய விஷயங்கள கவனிக்கலாம். அந்தச் சின்ன வீடுகள்லயும் சந்தோஷம் நிறைஞ்சிருக்கறத பாக்கும்போது அந்த சந்தோஷம் எனக்குள்ளேயும் பரவுது.

தினமும் வேலை செய்யற ஒரு ஆசாரியோட தினசரி சம்பளம் 200 ரூபா. நாள் ஃபுல்லா வேலை பார்த்தா கிடைக்கறது 200 ரூபா. ‘வீட்டுக்கு சீக்கிரம் போகணும் சார், சாயங்காலம் வீட்டுக்கு போயி எல்லோரும் சேர்ந்து உக்காந்துதான்சார் சாப்டுவோம். எல்லோரும் காத்திருப்பாங்க சார்’-ன்னு சொல்லிட்டு அவசரம் அவசரமா சம்பளத்த வாங்கிட்டு ஓடின ஆசாரி, அவரோட சந்தோஷத்த கொஞ்சம் எனக்கும் கொடுத்துட்டு ஓடினாரு.

தினமும் கடலை வண்டி தள்ளி கடலை விக்கறவரு, ஒரு நாளைக்கு செய்யற மொத்த வியாபாரம் 200, 300 ரூபா.

பழைய புடவைகளையும் துணிகளையும் வாங்கிட்டு எவர்சில்வர் பாத்திரம் கொடுக்கறவரு, தினமும் ஒரு இருவது முப்பது கிலோ மிட்டர் சைக்கிள்ல போயி சுத்தி சம்பாதிக்கறது கொஞ்சம்தான். அவரோட சந்தோஷம் மாஸ்டர் கார்டு மாதிரி. ப்ரைஸ்லெஸ். பழைய துணிக்கும், பாத்திரங்களுக்கும் பேரம் பேசி முடிச்சதுக்கப்புறம், ‘ஒரு காஃபி போட்டு குடும்மா!!’-ன்னு என் தங்கைகிட்ட உரிமையோட கேட்டு வாங்கி குடிச்சிட்டு போனாரு. எங்க பாட்டி காலத்துல இருந்தே பாத்திரம் விக்கறாராம். லாங் டைம் பாண்டேஜ்.

புடவை மேட்டருக்கு வர்றேன். கிராமத்துல இருக்கற பல ‘பெரியக்காக்களும்’, ‘பெரியம்மாக்கள்’ பல பேரும் இப்போ மங்கை நைட்டிக்கு மாறிட்டாங்க. ரொம்ப சின்ன கிராமங்கள்ல கூட நைட்டி புகுந்துடுச்சு. ஏற்கனவே தாவனிகளுக்கு ‘பை பை’ சொல்லிட்டாங்க. இன்னும் கொஞ்ச நாள்ல புடவைகளுக்கும் ‘பை பை’ தான். கல்யாணம் மாதிரி விழாக்களுக்கும் மட்டும் கட்டிக்கற விஷயமா புடவைகள் மாறிடலாம். ‘ரிவர்சிபுல் சாரீஸ்’ மாதிரி புதுப்புது கண்டுபிடிப்புகள்தான் புடவைகளுக்கு உயிர் கொடுக்கம்ன்னு நெனைக்கறேன்.

மீண்டும் சந்திப்போம்..