நீருயர நெல்லுயரும்.

M C அமெரிக்கால சம்பாதிச்ச பணத்துல சில லட்சங்கள சேர்த்து வெச்சு அந்த பணத்துல பயிர்-ன்னு ஒரு லாபமீட்டா நிருவனம் ஆரம்பிச்சான். தேனூர் கிராமத்துல மருத்துவமனை கட்டவும், கல்வி மையம் கட்டவும் இடம் பார்த்துகிட்டு இருக்கும்போதுதான் நன்கொடையாவே ஒரு இடம் கெடைச்சது. தென்னை மரங்கள் பயிரிடப்பட்ட நல்ல நிலம். அதுலதான் இப்போ மருத்துவமனை இயங்கிட்டு இருக்கு. தென்னை மரங்கள் இருந்துதே தவிர சரியா பராமரிக்கப் படாமதான் இருந்தது.

மருத்துவமனை கட்டினதுலயும் சரி, அந்த நிலத்த சரியா பயன்படுத்த ஆரம்பிச்சதுலயும் சரி, M C யும் தேனூர் கிராம மக்களும் சேர்ந்து நெறைய புதிய முயற்சிகள் செஞ்சிருக்காங்க.

* தென்னை மரங்களுக்கு இடைல நெல் ஒற்றைப் பயிர் முறைல (Single crop) முறைல நெல் பயிரிட்டிருக்காங்க. ஜப்பான்ல இந்த முறை நல்ல பயன் கொடுக்கற முறையாம்.

* மருத்துவமனை மற்றும் கல்வி நிலைய கட்டிடம் கட்ட, IIT ல ஆராய்ச்சி செஞ்சு பரிந்துறை செஞ்ச முறைல, கற்கள, அவங்களே தயாரிச்சு பயன்படுத்தியிருக்காங்க. செங்கல் கட்டிடத்த எதிர்பார்த்து போன எனக்கு எனக்கு இப்டி ஒரு ஆச்சர்யம் காத்திருந்துச்சு.

* கட்டிடங்களுக்கு கூறையா ‘நாட்டு ஓடு’ போட்டிருக்காங்க. தென்னந்தோப்புக்குள்ளயே இருக்குற செந்திலோட வீட்டுக்கு கீத்துலயும், நானல்லயும் கூறை. உள்ள நல்லா குளு குளு-ன்னு இருந்துச்சு.

நல்ல தலைவர்-ன்னா யார்-ன்னு கொஞ்ச நாளுக்கு முன்னாடி ஏதோ ஒரு புத்தகத்துல படிச்சேன்.
மக்களுக்கு கட்டளைகள அள்ளி வழங்கி மக்கள கட்டுக்கோப்பா வெச்சிருக்கறவனோ, பேரைச்சொன்னாலே நடுக்கம் ஏற்படற மாதிரி நடந்துக்கறவனோ, மக்களை வெற்றிப் பாதைல அழைச்சுகிட்டு போறவனோ இல்ல.

ஒரு வெற்றிக்கப்புறம், எங்கே மக்கள் அந்த வெற்றிய தாங்களே உழைச்சு அடைஞ்சோம்-ன்னு நெனைக்கறாங்களோ, எந்த தலைவன் மக்களுக்கு அப்டி ஒரு எண்ணத்த ஏற்படுத்தற மாதிரி நடந்துக்கறானோ அவன்தான் நல்ல தலைவன்-னு படிச்சேன். அதை தேனூர்ல பாக்க முடிஞ்சுது.

மருத்துவமனைல வேலை பாக்கற மக்கள் நலப் பணியாளர்கள், Lab assistants, களத்து மேட்ல நெல்லடிக்கறவங்க-ன்னு எல்லோர்கிட்டயும் இந்த வேற்றியோட பெருமிதமும் பொறுப்பும் தெரியுது. அவங்களோட தினசரி வேலைகள பத்தியும், நோயாளிகளைப் பத்தியும், அவங்களை கவனிக்கும் முறைகள் பத்தியும் என்கிட்ட சொல்லும்போது அவங்க முகங்கள்ல இருந்த பெருமிதமும் சந்தோஷமும் எழுத்துக்களால சொல்ல முடியாதது.

காய்ச்சல், மூட்டுவலி, வயித்துவலி, பூச்சிக்கடி-ன்னு பலவகையான நோயாளிகள். என்கிட்ட பேசிட்டு இருந்தப்போவே, பழங்கஞ்சிய குடிச்சிட்டு வயித்துக்கு ஒத்துக்காம, வயத்துவலின்னு ஒரு அம்மா வந்தாங்க. அவங்களுக்கு முதலுதவி செஞ்சு தகுந்த மருந்து கொடுத்து கவனிக்க போயிட்டாங்க.

நான் காலைல போனப்போ M C-யும் இன்னொரு குழுவும் சேர்ந்து ஒரு பகுதி நிலத்துல அறுவடை செஞ்சு நெல்லை களத்துமேட்டுக்கு கொண்டு வந்துகிட்டு இருந்தாங்க. நான் சாயங்காலம் களம்பும் வரைக்கும் அந்த வேலை தொடர்ந்து நடந்துகிட்டு இருந்துச்சு.

M C -கிட்ட பேசிட்டிருந்த விஷயங்கள் பத்தி அடுத்த பதிவுல சொல்றேன்.