நெல்லுயர குடி உயரும்.

MC ஆரம்பிச்ச இந்த முயற்சிக்கு என்னோட நண்பர்கள் பலபேரு பலவிதமான உதவிகள் செஞ்சிகிட்டு இருக்காங்க. நானும் ராமர்-க்கு அனில் மாதிரி அப்பப்போ சில கல்லு எடுத்து போடுவேன்.

பயிர் மூலமா மருத்துவமனை, கல்விக் கூடம் ரெண்டும் கட்றது மட்டும் MC-யோட திட்டம் இல்ல. தேனூர் கிராமத்து மக்களோட வாழ்க்கைத் தரத்த உயர்த்தறதுதான் திட்டம். அந்த கிராத்து இளைஞர்களுக்கு வேலை கொடுக்கறது, இளைஞிகளுக்கு சிறுதொழில் செய்ய பயிற்சிக்கு அனுப்பறது, சிறுவர் சிறுமிகளுக்கு பள்ளிக்கூடம் போக உதவறது மாதிரி பல வேலைகள் செஞ்சுகிட்டு இருக்கான்.

நான் போனப்போ 11வது படிக்கற ஒரு சிறுமி வந்திருந்தா. அவங்க அப்பா வட இந்தியால கொத்தடிமையா இருந்து அரசாங்கத்தால சமீபத்துல காப்பாத்தப்பட்டிருக்காரு. அரசாங்கத்துல இருந்து அவருக்கு கிடைக்க வேண்டிய உதவிகள் சரியா கெடைக்கல. மருத்துவமனை திறப்பு விழாவுக்கு வந்திருந்த கலெக்டர்ட்ட சொல்லி, அந்த சிறுமியோட படிப்பு செலவுக்காக பணம் ஏற்பாடு பண்ணித்தர சொல்லி கேட்டிருக்கான். கலெக்டரும் அதுக்கு ஒத்துகிட்டாரு. அதுக்காக என்னென்ன செலவுகள்-ன்னு பட்டியல் போட்டு கலெக்டருக்கு அனுப்பறதுக்காகதான் அந்த பொண்ணு அன்னிக்கு வந்திருந்தா.

அந்த ஊர் மக்களுக்கு வேலை கொடுக்கறதுக்காக அந்த ஊர் மக்களை உற்சாகப்படுத்தி அவங்ககிட்டயே ஐடியாக்கள் கேட்டிருக்கான். அந்த மக்கள் சேர்ந்து சொன்ன ஐடியா, ஒரு சின்ன பால் பண்ணை வெக்கறது.

MC அதை பாராட்டி, பால் பண்ணை வைக்கறதுக்கு பயிர் அறக்கட்டளையோட எடத்தையே தர்றதா சொல்லி, அதுக்காக எடம் ஒதுக்கி, ஒரு சின்ன பில்டிங் ரெடி. மாடுகள் வாங்கறதுக்கு கடனா பணம் ஏற்பாடு செய்யற முயற்சி நடந்துகிட்டு இருக்கு. பால் வித்து வர்ற லாபம் ஊர் மக்களுக்கு. அந்த லாபத்துல இருந்து கடனை அவங்களே கட்டிட வேண்டியது. பால் பண்ணை வைக்கற எடத்துக்கு வாடகையா, அவங்க, பயிர் அறக்கட்டளைக்கு பால் சப்ளை செஞ்சிடுவாங்க. டாக்டர்கள், மக்கள் நலப் பணியாளர்கள்-ன்னு வெளியூர்கள்ல இருந்து வந்து மருத்துவமனைய ஒட்டி கட்டியிருக்குற குவாட்டர்ஸ்லயே மக்கள் தங்கும்போது, அவங்களோட பால் தேவைகளை இந்த பால் பண்ணை பூர்த்தி செய்யும்.

இன்னொரு ஐடியா, மருத்துவமனைக்கு பக்கத்திலயே இருக்குற நிலத்த வாங்கி அதுல சாகுபடி செய்யறது. அதுக்காக ஒரு Joint Venture ஐடியா சொன்னான். நிலம் வாங்கறதுக்கு வெளில இருந்து Investors-அ அழைக்கறது. நிலம் வாங்கி அதுல MC-யும் ஊர் மக்களும் சேர்ந்து பயிர் செய்வாங்க. வர்ற லாபத்த ஊர் மக்களும், Investors-உம் பிரிச்சுப்பாங்க. நிலத்தோட மதிப்பு ஏறும்போது அதுலயும் Investors-க்கு லாபம் உண்டு.

இந்த நிலத்த வாங்கி அதுல லாபம் பாக்கறதுக்கு பதிலா, சென்னை மாதிரி ஊர்ல நிலம் வாங்கினா நல்ல லாபம் கிடைக்குமே மக்கா! அந்த லாபத்த ஊர் மக்களுக்கு கொடுக்கலாமே மக்கா!!“-ன்னு நான் சொன்னதுக்கு, “உண்மைதான், ஆனா, அந்த லாபம் இந்த ஊர் மக்களுக்கு நன்கொடையைதான் கொடுக்க முடியுமே தவிர, உழைப்பை கொடுக்காதே!!“-ன்னான். உண்மைதான். நிலத்த வாங்கறதுக்கு Investors நான் ஏற்பாடு பண்றதா வாக்கு கொடுத்துட்டு அங்க இருந்து புறப்பட்டேன்.

நீங்க இந்த கூட்டு முயற்சில பங்கு எடுத்துக்கணும் விரும்பினா, (Joint Venture-ல Investors-ஆ ஆக விரும்பினா) சொல்லுங்க. பயிர் மூலமா ஒரு கிராமத்துக்கு உதவின திருப்தியும், விவசாயம் மூலமா லாபமும்-ன்னு இரட்டிப்பு சந்தோஷம் கேரண்டியா கெடைக்கும்.

இன்வெஸ்டரா இல்லாம பயிரோட முயற்சிகளுக்கு சிறிய நன்கொடை கொடுக்கறதா இருந்தாலும் சந்தோஷம் தான்.

மீண்டும் சந்திப்போம்.