இந்திய வாசி.

இந்தியா வந்து, சென்னை வாழ்க்கை ஆரம்பிச்சிட்டேன். இப்போவே நல்லா வெய்யில் அடிக்க ஆரம்பிச்சிடுச்சு. வீட்ல இருந்து அலுவலகம் ஒரு 15 அல்லது 20 கிலோ மீட்டர் இருக்கும். வீடு விருகம்பாக்கத்துல, அலுவலகம் கந்தஞ்சாவடில(in OMR). கத்திப்பாராலயும், OMR-லயும் பெரிய லெவல்ல சாலைப்பணிகள் நடக்கறதால சுமாரா ஒரு மணி நேரம் ஆகுது. இந்த வருஷத்துக்குள்ள முக்கியமாட சாலைகள்ல வேலைகள் முடிஞ்சுடும் போல இருக்கு. சாலை வேலைகள் எக்ஸ்பிரஸ் வேகத்துல நடக்குது.

கார் ஓட்டும்போது செல் ஃபோன்ல பேசினா, 1000 ரூபாய் ஸ்பாட் ஃபைன். யாரு இதயெல்லாம் பாக்கப்போறா-ன்னு நெனைச்சேன். நேத்து மாட்டிகிட்டு அபராதம் கட்டினேன்.

முக்கியமா சொல்லவந்தது பேட்டண்ட்(Patent) பத்தி. அமெரிக்கால இருந்து வரும்போது ஒரு சின்ன பிஸினஸ் ஐடியாவோட வந்தேன். அந்த பிஸினஸ இங்க ஆரம்பிச்சா, அதை பாத்து மத்தவங்களும் ஆரம்பிச்சுட்டா, என்னோட இன்வெஸ்ட்மெண்ட்(Time and Money) எல்லாம் வீணாய்டுமே-ன்னு நெனைச்சு, அந்த ஐடியாவ பேட்டண்ட் பண்ண முயற்சி செஞ்சேன். அதுக்காக ஒரு பேட்டண்ட் அட்வகேட்ட போயி பார்த்தேன்.

என்னோட ஐடியாவ விவரமா விளக்கிச் சொன்னேன். ஆனா, வெறும் ஐடியாவையோ, காண்ஸப்ட்-டயோ(Concept), இல்ல எந்த புது Software-ரயோ இந்தியால பேட்டண்ட் பண்ண முடியாது-ன்னு சொல்லிட்டாங்க. இந்திய சட்டத்துல அதுக்கெல்லாம் இடம் இல்லயாம். அமெரிக்கா, ஆஸ்திரேலியா மாதிரி நாடுகள்ல வேணும்னா பண்ண முடியும். இந்தியால முடியாது-ன்னு சொல்லிட்டாங்க. Mechanical Products, Chemical products மாதிரி விஷயங்களைதான் பேட்டண்ட் பண்ண முடியுமாம். ஐடியாக்கள், Concept-கெல்லாம், Copy Right தான் வாங்க முடியுமாம்.

Copy Right-ங்கறதுக்கு அவ்ளோ Protection கெடையாதான். யார் வேணும்னாலும் சில சின்னச் சின்ன மாறுதல்கள செஞ்சிட்டு காப்பியடிச்சுக்கலாம். பேட்டண்ட்-ட காப்பியடிக்கணும்-னா நெறைய புதுமைகள காட்டணுமாம். (They have to show significant improvements to an existing patent, in order to get a new patent).

அதுனால, கொஞ்சம் சோகமா இருந்தாலும், என்னோட ஐடியாவ ஒரு product ஐடியாவா மாத்தி அப்புறமா பேட்டண்ட் பண்ணலாம்-ன்னு கொஞ்சம் நம்பிக்கையோட திரும்பி வந்துட்டேன்.

திரும்பி வரும்போது அமெரிக்கால நடந்த ஒரு விஷயம் ஞாபகம் வந்தது. அமெரிக்கால ஒரு இந்தியர் ஒரு பேட்டண்ட் வாங்கியிருக்காரு. சாம்பிராணி மாதிரி வாசனைப் பொருட்கள மெழுகுவர்த்தியோட சேர்த்து, தெய்வீக மனம் கமழும் மெழுகுவர்த்திகள் தயாரிக்கற ஐடியா. இப்போ அதுமாதிரி தெய்வீக மெழுகுவர்த்தி தயாரிக்கற கம்பெனியெல்லாம் அவரோட பேட்டண்ட்-க்காக அவருக்கு ராயல்ட்டியா பணம் கொடுத்துகிட்டு இருக்காங்க. உக்காந்த இடத்துலயிருந்தே மில்லியனாராயிட்டாரு. எப்டி??

ஐடியாக்களை பேட்டண்ட் பண்ணாம இருக்கறதுனால இந்தியர்களோட நெறைய புதுப்புது ஐடியாங்கள் வேளி நாடுகள் போகுதுன்னு ஒரு பாய்ண்ட் சொன்னாரு அட்வகேட். ஆனா இன்னொரு பாயிண்ட்டும் கவனிக்க வேண்டி இருக்கு. பேட்டண்ட் ஓனர்களுக்கு நெறைய பணம் ராயல்ட்டியா கொடுக்க வேண்டியிருக்கறதுனால, பொருட்களோட விலை அதிகமாயிடும்.

மெழுகுவர்த்தி கம்பெனி பேட்டண்ட் ஓனருக்கு கொடுக்கற ராயல்ட்டியையும் சேர்த்து ஒரு தெய்வீக மெழுகுவர்த்தி, 500 ரூபாய்-க்கு வித்தாங்கன்னா, மக்கள் எப்டி வாங்குவாங்க?

அதுனால, புதுப்புது ஐடியாக்கள பேட்டண்ட் பண்றது, இந்தியாக்கு பலமா?, இல்ல, பொருட்கள் மக்களுக்கு எட்டாக் கனிகளா ஆய்டும்-ங்கறதுனால பலவீனமா??

கடைசியா ஒரு தகவல். Apple கம்பெனி, அவங்க புதுசா அறிமுகம் செய்யப்போற iPhone-க்காக அப்ளை பண்ணின பேட்டண்ட்டுகளோட எண்ணிக்கை சுமார் 150-க்கு மேல.

மீண்டும் சந்திப்போம்.