ஏன் என்ற கேள்வி.

இந்தியா வந்ததுல இருந்து நெறைய விஷயங்கள ஏன் அப்டி செய்யணும்-னு யோசிக்கறேன். சிலத உங்ககிட்ட பகிர்ந்துக்கறேன்.

சென்னைல தண்ணி கஷ்டம் இப்போ அவ்வளவா இல்ல. ஆனாலும் சென்னையோட வளர்ச்சிய வெச்சு பார்த்தா தண்ணி கஷ்டம் இப்போதைக்கு பதுங்கிகிட்டு இருக்குதான் தொனுது. பாயும் நேரம் வரும்-ன்னுதான் தொனுது.
பொதுவாவே தண்ணீர் சிக்கனம் என்கிட்ட ஒட்டிகிடுச்சு. தேவையில்லாம தண்ணீர வேஸ்ட் பண்ண மாட்டேன். அதுனாலதான் இந்த ‘ஏன்’ கேள்வி.

நாம டாய்லட்டரி உபயோகத்துக்காக பயன்படுத்தற தண்ணீர், மாநகராட்சி கழிவு நீர் வாரியத்தோட கழிவுநீர் குழாய்கள் மூலமா வீட்ல இருந்து வெளியேற்றப்படுது. ஓகே. ஆனா நாம குளிக்கற தண்ணீர், பாத்திரம் தேய்கற தண்ணீர், துணி துவைக்கற தண்ணீரெல்லாம், ஏன் அங்க போகணும்? ஏன் சரியான முறைல ‘Ground Water Recharge’-க்கு பயன்படுத்தக்கூடாது.

பெரிய ஏரிகள்ல இருக்குற தண்ணிய எடுத்து பல அடுக்குகளா சுத்தம் பண்ணிதான் கார்ப்பரேஷன் தண்ணியா கொடுக்கறாங்க. அதே மாதிரி ஒரு மினி மாடல்ல வீட்டுக்கு சைடுலயே சுத்தம் பண்ற மாதிரி அமைச்சு ஏன் Ground Water Recharge’-க்கு பயன்படுத்தக்கூடாது.

உதாரணமா, வீட்டுக்கு பின்புறத்துல ஒரு குழிய வெட்டி, டாப் லேயர்ல பெரிய கூழாங்கற்கள் போட்டு சாலிட் போருட்கள ஃபில்டர் பண்ணிட்டு, அடுத்த லேயர்ல ஆத்து மணல் போட்டு, அதுக்கு கீழ, க்ளோரின் ஒரு லேயர், லைம் சோடா ஒரு லேயர் அப்டின்னு பல லேயர்கள் அமைச்சு தண்ணீர சுத்தம் பண்ணி ஏன் நிலத்தடி நீர Recharge பண்ணக்கூடாது?

கழிவு நீர சுத்தம் பண்ண எவ்ளோ செலவாகுது? சுத்தம் செய்யப்பட்ட தண்ணீர் என்ன செய்யப்படுது? நம்ம வீட்ல இருந்து கழிவு நீரா வெளியேற்றப்படற தண்ணீர்ல எத்தனை சதவீதம் நிஜமாவே கழிவு நீர்?