I can take any heat not cold!!

“I can take any heat not cold” அப்டீன்னு அமெரிக்கால இருக்கும்போது, கூட வேலை பாக்கறவங்ககிட்ட ஸ்டைலா பீட்டர் உட்டுகிட்டு இருந்தேன். ஆனா அடுப்புலயே வாழறதுன்னா என்னன்னு இப்போதான் தெரியுது. என் சக இந்தியனுக்கு இல்லாத A/C எனக்கு மட்டும் எதுக்கு-ன்னு நானும் A/C போடாம முயற்சி செய்யறேன். ஆனா வேகுது. வீட்ல இருந்து வேலை செய்யற சில பகல்கள்ல லாப்டாப்-லயே ஆம்லட் போட்டுடலாம் போல இருக்கு. அவ்ளோ சூடு. சென்னைலதான் அப்டீன்னா கிராமத்துல அதுக்கு மேல இருக்கு. தஞ்சாவூர்ல நேத்து 107.6.

குளிர்னால அமெரிக்கால வின்ட்டர் டிப்ரஷன் வரும்-ன்னு சொல்லுவாங்க. ஆனா, எனக்கு இங்க வெய்யிலால சில சமயங்கள்ல கோவம் வருது. மதியம் 12 மணிக்கு கடைக்கு போயி வாழையிலை வாங்கிட்டு வீட்டுக்கு வரும்போது ‘அடடா தயிர் வாங்க சொல்ல மறந்துட்டேங்க!!’-ன்னு மனைவி சொன்னா எறிஞ்சு விழறேன்.

காலைல 7 மணிக்கு முன்னாடியே குளிச்சிடணும். 8 மணிக்கே தண்ணி வெத வெதப்பா ஆய்டுது. 10 மணிக்கெல்லாம் நல்லாவே சுடுது. பண்ணிரண்டு மணிக்கு ‘Don’t even think about it’.

காவேரி ஆத்துல இருந்து ஒரு 20 அடி தூரத்துல எங்க வீடு. ஆனா ஆறுகள்லாம் இப்போ வரண்டுபோயிதான் கெடக்கு. கானல் நீர்தான் தெரியுது. ஜூன் மாசத்துல மேட்டூர் அணை திறப்பாங்களாம். அப்போ கொஞ்சம் சூடு கொறையலாம். சென்னைல மழை வந்தாதான் உண்டு.

கிராமங்கள்ல நெறைய கடைகள் மதிய நேரத்துல மூடிதான் கெடக்கு. சாலைகள் வெறிச்சோடிக்கிடக்கு. சூரியனோட வெப்பம் மட்டும்தான் போற வர்ற மக்கள் மேல அனலை அள்ளீ வீசிட்டு இருக்கு.

இந்த சம்மர்ல, ரெண்டு விஷயம் வருத்தத்த கொடுக்குது. ஒண்ணு, தினமும் இவ்ளோ சூடு உருப்படியா எதுக்கும் உபயோகப்படுத்தப் படாம வேஸ்ட்டாகுதே-ன்னு!!

(சூரியனோட வெப்பத்த வெச்சு மின்சாரம் உற்பத்தி செய்ய முடியாதா? (Solar power is just using Sun’s light (Photoelectric) not the heat). இந்த சூட்ட, கடல் நீர குடிநீரா ஆக்கறதுக்கு பயன்படுத்த முடியாதா?)

இன்னொண்ணு, இவ்ளோ சூட்ல இருந்து நம்ம மக்கள காப்பாத்த முடியலயே-ன்னு.

(எல்லோருக்கும் சோலார் பவர் பயன்படுத்தற ஒரு ஏர் கூலர் கம்மியான வெலைல கெடைச்சா எப்டி இருக்கும்!!)