பழைய படங்கள்.

என்னோட கம்பியூட்டரை சுத்தம் செஞ்சப்போ கிடைத்த பழைய படங்கள். இந்தியாவ சுனாமி தாக்கினப்போ, அமெரிக்கால, எடிசன் ஸ்டேஷன்ல நான், என் மனைவி, என் தம்பி மூணு பேரும், நிதி திரட்டினப்போ எடுத்த புகைப்படங்கள். பிரதமருக்கு சப்போர்ட் செய்யற மாதிரி கையெழுத்துகளையும், பிரதமர் நிவாரண நிதிக்காக பணமும் திரட்டினோம். பல நாடுகள்/மொழிகளைச் சேர்ந்தவங்க கையெழுத்து போட்டாங்க. நிதியும் கொடுத்தாங்க. $960 பணமாகவும், சுமாரா ஒரு $1000 காசோலையாகவும் வாங்கி அனுப்பினோம்.

Wife and Brother
என்னோட தம்பியும், என் மனைவியும்.

Signs
சேகரிச்ச கையெழுத்துகள்.

Check
பிரதமருக்கு அனுப்பின காசோலை.

நதிநீர் இணைப்புக்காக, பூம்புகார்-ல ஆரம்பிச்சு, காவேரி பாயற ஊர்கள் வழியா தலைக்காவிரி வரைக்கும் போயி இப்படி ஒரு கையெழுத்து/நிதி சேகரிப்பு செய்யணும்-ன்னு ரொம்ப நாள் ஆசை. நடக்குமா-ன்னுதான் தெரியல.