Heat Vs Light.

இத தமிழைவிட ஆங்கிலத்துல ஈசியா கேட்றுவேன்னு நெனைக்கறேன்.

We produce electricity from the solar. right?
Would the amount of energy we produce from the sunlight be same in a hot dessert and in some cold place up there in himalayas?

அமெரிக்கால நல்லா வெயில் அடிக்கும்போதும் வெப்பநிலை ஒரு 60 டிகிரி 70 டிகிரிதான் இருக்கு. ஆனா நம்ம ஊர்ல நூற தாண்டுது. இந்த சூட்ட பயன்படுத்தி நாம அதிகமா எனர்ஜி ப்ரொடியூஸ் பண்ண முடியாதா?

சூரிய வெளிச்சத்துக்கும் சூட்டுக்கும் என்ன சம்பந்தம்? நல்லா வெயில் அடிக்கற ஒரு சாதாரண நாள்ல அமெரிக்கால சூடே தெரியறது இல்ல. அதுனால சூரிய வெளிச்சத்துக்கு சுட்ட கெளப்பற சக்தி இல்ல-ன்னு சொல்லிட முடியுமா?

சூரிய ஒளிய ஒரு லென்ஸ் வழியா குவிச்சா ஒரு பேப்பரை எரிக்கற அளவுக்கு சூடு வருதே.

கொஞ்ச நாள் முன்னாடி ஒரு T.V நிகழ்ச்சி பார்த்தேன். பூமியோட வரலாறு பத்தி. அதுல ஐஸ் ஏஜ் பத்தி ஒரு பகுதி. ஒரு காலத்துல, பூமியோட வட பகுதில நெறைய ஐஸ் இருந்ததால அது சூரிய வெளிச்சத்த Reflect பண்ணிடுமாம். அப்டி பண்றதால, பூமி இன்னும் குளிர்ச்சி அடைஞ்சு இன்னும் அதிகமான தண்ணி ஐஸ் ஆக ஆரம்பிச்சுதாம். ஒரு ஸ்டேஜ்ல, பூமி முழுக்க ஐஸ் ஆயிடுச்சாம். So, More the sunlight reflected, the less is the heat it can produce.

அப்போ, மீன் தொட்டி மாதிரி ஒரு தொட்டி எடுத்துக்கலாம். சுத்திலும் க்ளாஸ்(Glass). மூடியும் க்ளாஸ். இன்னொரு தொட்டி எடுத்துக்கலாம். சுத்திலும் மிரர்(Mirror). மூடியும் மிரர். ரெண்டையும் சூரிய வெளிச்சத்துல வைக்கலாம். க்ளாஸ் தொட்டில இருக்குற சூட்டைவிட கண்ணாடித் தொட்டில சூடு கம்மியா இருக்குமா?