நீடூடி வாழ்க!!

சிறுகதை எழுதறவங்க, சிறு சிறுகதை எழுதறவங்கல்லாம் தொலைக்காட்சில வர்ற விளம்பரங்கள கவனிக்கணும்-ன்னு நெனைக்கறேன். 10 நொடி 20 நொடிகள்ல ஒரு கதையே சொல்றாங்க. உணர்வுப்பூர்வமா.

Air Tel விளம்பரத்துல ஒரு தாத்தா பாட்டியோட அவங்க பேரன் ரொம்ப வருஷத்துக்கு அப்புறம் வந்து சேரற கதை. அப்புறம் அந்த பேரன் திரும்பிப்போற உணர்வுகள்-ன்னு 15 நொடிகள் ஒரு சூப்பர் எமொஷனல் கதை.

சமீபத்துல ரொம்ப ரசிச்சது ICICI-ஒட இன்ஷியூரன்ஸ் விளம்பரம். ‘நீடூடி வாழ்க’.
வாழ்க்கை

இன்ஷியூரன்ஸ் விண்ணப்பத்துல கையெழுத்து போடச்சொல்ற மனைவி.

‘நான் செத்தப்புறம் வர்ற பணத்த வெச்சுகிட்டு என்ன பண்ணப்போற?’-ங்கற எல்லார் மனசுலயும் எழும்பற கேள்வி.

‘World Tour போவேன்’னு மனைவியோட நக்கல்.

‘மகளோட கல்விக்கும், நம்ம எதிர்காலத்துக்கும் சேர்த்து இன்ஷுரண்ஸ் எடுத்துட்டா வாழ்க்கைல டென்ஷன் கொறைஞ்சுடும். டென்ஷன் கொறைஞ்சுட்டா நீண்ட நாள் வாழலாம்’-ன்னு மனைவியோட பதில்

‘அப்போ உன்ன நான் ரொம்ப நாள் சகிச்சுக்கணும்’-ன்னு கணவனோட நக்கல். அதுக்கப்புறம் கையெழுத்து போடறது-ன்னு எல்லாம் சேர்த்து 15 அல்லது 20 நொடிகள்தான்.
சூப்பரா சொல்லியிருக்காங்க.

நடிகைகள் வந்து ஆட்டம் போடற விளம்பரங்களைவிட இந்த விளம்பரங்கள் மனசுல ஈசியா பதியுதுன்னுதான் நெனைக்கறேன்.

நீடூடி வாழ்க!!


Hindi Version.
15, 20 வினாடிகள் இல்ல. 48 வினாடிகள்.

தேடிப்பிடிச்சிட்டேன். Google நீடூடி வாழ்க!! :)