சாயம் பூசாத சாதா சிவாஜி!!

அமெரிக்கால திரும்பி இருந்து வந்து ஸ்கூல் கட்றேன், காலேஜ் கட்றேன், ஹாஸ்பிடல் கட்றேன்-ன்னு சும்மா பட்டைய கெளப்பியிருக்காரு சிவாஜி. கருப்பு பணத்துக்கெல்லாம் ரின் சுப்ரீம் போட்டு வெளுப்பாக்கி தமிழகம் பூரா வெள்ளையடிச்சிருக்காரு. இடைல ‘சஹானா சாரல்’ கூட வேற ‘பழகு பழகு’-ன்னு பழகறாரு. ரஜினி படத்த பாக்கலாம், ஆனா எந்த கேள்வியும் கேட்கக்கூடாது-ங்கறதுக்கு இந்த சிவாஜி ஒன்னும் விதிவிலக்கு இல்ல.

நான் சொல்ல வர்ற சாயம் பூசாத சாதா சிவாஜியும் அமெரிக்கால இருந்து திரும்பி வந்தாரு. இந்தியாவோட முதுகெலும்புல ஒன்றான, அடிப்படை வசதிகள் அவ்ளவா இல்லாத, ‘தேனூர்’-ங்கற கிராமத்த தேர்ந்தெடுத்து அங்க போனாரு. ஒரு மருத்துவமனை கட்டினாரு. Education Center கட்டிகிட்டு இருக்காரு. தேனூர் மக்களோட ஒன்னா கலந்துட்டாரு. இவரைப் பத்தி சில பதிவுகள் போனமாசம் எழுதிட்டதால இப்போ இதோட ஸ்டாப்பிக்கறேன்..

இன்னிக்கு அவர் ஏற்படுத்தின பயிர் அமைப்புல இருந்து ஒரு நியூஸ் லெட்டர் வந்துச்சு. அதை உங்ககிட்ட பகிர்ந்துக்கலாமே-ன்னு இதை எழுதறேன். படத்துல சிவப்பு வட்டத்துக்குள்ள தெரியற அந்த முகம்தான், சாயம் பூசாத கிராம சிவாஜியோட முகம். :)

பயிர்
Click on the image to see it bigger.