அப்டியென்ன அரசியல்??

அப்துல் கலாம் அவர்களை மூன்றாவது அணியோட வேட்பாளரா அறிவிச்சதை சொல்றேன். அப்டியென்ன அரசியல்? அவர் ரெண்டு வருஷங்களுக்கு முன்னாடி எழுதுன ஒரு புத்தகத்துலயே அடுத்த முறை குடியரசுத்தலைவர் பதவிக்கு போட்டியிடறதுல விருப்பம் இல்லை-ன்னும் கல்விச்சேவை செய்யதான் விருப்பம்-ன்னும் சொல்லியிருந்தாரு.

அதையெல்லாம் இவங்க படிச்சிருக்கா வாய்ப்பில்லன்னாலும், மூன்றாவது அணி-ன்னு ஒன்ன அமைச்சு ஒருத்தர வேட்பாளர அறிவிக்கறவங்க, அதுவும் ஒரு நாட்டோட முதல் குடிமகனா இருக்கற ஒருத்தர் பேர அறிவிக்கறவங்க, அவர்-ட்ட முன்னாடியே பேசி சம்மதம் வாங்கிகிட்டு அறிவிக்கவேண்டாம். அறிவிச்சுட்டு அப்புறமா போயி பேசுவாங்களாம். எவ்ளோ இண்டீசண்ட். என்ன கேவளமான செயல். எவ்ளோ கேவளமான அரசியல்.

எங்கல்லாம் இதை பயன்படுத்தறாங்க தெரியுமா?

‘எவுகணை கண்ட மாவீரனை, அறிவியல் மாமேதையை, இளைஞர்களின் நாயகனை, முக்கியமாக ஒரு சக தமிழனை குடியரசுத்தலைவர் பதவிக்கு ஆதரிக்காதவர்களுக்கா உங்கள் ஓட்டு.’ (அடப்பாவிகளா இதுக்காகத்தானா இந்த ஆட்டம் போட்டீங்க!!)

எல்லா அரசியல்வாதிகளும் அவங்களோட நலனுக்காக ஒரு நல்லவரை, இந்தியாவ இந்த அரசியல்வாதிகளைத் தாண்டி ஒரு முன்னோடி நாடா, வல்லரசு நாடா ஆக்கணும்-ன்னு கனவு கண்டவரை, நம்ம நாட்டின் முதல் குடிமகனை, எவ்ளோ மோசமா பயன்படுத்தறாங்க-ன்னு நெனைச்சா கோவமா வருது. என்னத்த செய்ய!!??

ahhhhhதமிழ் மொழிய நம்ம மக்களுக்கு போதைப் பொருளா பயன்பத்தறத எப்போதான் இந்த பாழாப்போன அரசியல்வாதிகள் நிறுத்தப்போறாங்களோ. சும்மா ஒரு வார்த்தை சொன்னா போதும் பத்திக்குது.

“ஒரு தமிழனை இன்னொரு தமிழன் ஆதரிக்கவில்லை, பாருங்கள்”-ன்னு ஒரு கட்சி. தமிழ் மொழியை பாராளுமன்றத்தில் பேசவைப்பேன்னு சபதம் பண்ணிட்டு ‘கனிமொழி’யை பேச அனுப்பறது இன்னொரு கட்சி.
இவங்ககிட்ட இருந்து எப்போதான் நாடு வெளில வர்றது?

அடுத்ததா இவங்க பயன்படுத்தற இன்னொரு போதை ஊசி நதிகள் இணைப்பு. மேடைல பேசறாங்களே தவிர வேற ஒன்னையும் ஒருத்தரும் பண்றது கெடையாது. பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளோம். தந்தி கொடுத்துள்ளோம்-ன்னு எதையாவது ஒன்ன சொல்லிடவேண்டியது. குறைந்த பட்சம் தென்னிந்திய நதிகளையாவது இணைக்கப் பாடுபடுவோம்-ன்னு சொல்றவங்க, எந்தெந்த மாநிலங்களோட பேசறீங்க? யார்யாரையெல்லாம் கூப்டு ஃபீஸிபிலிட்டி ஸ்டடி பண்ண சொன்னீங்க? தென்னிந்திய நதிகள்-ன்னா என்னன்ன? எந்தெந்த மாநிலங்கள் வழியா ஓடற நதிகள்? இதுனால என்னென்ன லாபங்கள்?? என்னென்ன பாதகங்கள்??. இதையெல்லாம் நம்மதான் கேட்கப்போறோமா? இல்ல கேட்டாதான் அவங்க சொல்லிடப்போறாங்களா?
சும்மா அப்பப்ப ஒரு ஸ்டேட்மெண்ட் உட்டா நமக்கு போதாதா!!??

வெளிமாநிலங்கள உடுங்க. நம்ம உள்ளூர் நதிகள் ரெண்ட இணைச்சுடட்டுமே பாப்போம். வழிமறியல் போராட்டம், கடையடைப்பு, லோக்கல் பந்த்-ன்னு மாத்தி மாத்தி பண்ணிட்டே இருப்பாங்க. இதுல ஒருத்தர் ரெண்டு பேர மேல அனுப்பிடுவாங்க. அப்புறம் அதை அப்டியே மறந்துட்டு, ஒருத்தர ஒருத்தர் தாக்கி ஸ்டேட்மெண்ட் விட்டு சூட்ட களப்பிடுவாங்க. நமக்குதான் எந்த சூடும் ஏற மாட்டேங்குது.