தேடல்.

வீட்ல எதையாவது தேடிகிட்டு இருக்கும்போது, ரொம்ப நாள் முன்னாடி உபயோகப்படுத்தின பேனா, சட்டை, பர்ஸ் இப்டி எதாவது கிடைச்சு, ஒரு குட்டி ‘ஃப்ளாஷ் பேக்’கை உண்டாக்கி, பழைய நினைவுகளைத் திரும்ப திரையிட்டு, சந்தோஷப்படுத்தும். அதுமாதிரி என்னோட முந்தைய பதிவுகள்ல இருந்து கெடைச்சது!!


Words travel. Moods won’t.
Posted by சரவ் (Sarav) on 03/30/05 1:25 AM | Tagged as: பிடித்த குறட்கள், General

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு.

பொருள் : யார் எதைச் சொன்னாலும் அதை அப்படியே நம்பிவிடாமல், உண்மை என்ன என்பதை ஆராய்ந்து தெரிந்து கொள்ளவேண்டும்.

இந்த அர்த்தம் என் அப்பா சொல்லிக்கொடுத்ததுங்க.. ஆனா அதுக்கும் மேல இந்தக் குறளுக்கு வேற சில உட்பொருள் இருக்குன்னுதான் நெனைக்கறேன்.

உட்பொருள் 1 : ‘உனக்கு நேரமே சரியில்ல, உனக்கு இன்னும் ஆறுமாசத்துல ஒரு பெரிய கண்டம் இருக்கு’ அப்படினு யாரோ சொன்னாங்க-னு.. அப்படியே நம்பிட்டு, ‘ஓவரா பயப்படறவங்க’,
‘உனக்கு 25% வட்டி தரேன், 50% போனஸ் தரேன்’ அப்படினு யாரோ சொன்னாங்க-னு.. அப்படியே நம்பிட்டு, ‘சீட்கு கம்பெனி-ல பணம் போடறவங்க’ இவங்களல்லாம் நாம தெனமும் பாத்துகிட்டுதான் இருக்கோம்.
இதுமாதிரி ஏமாறாம, நம்மகிட்ட சொல்றவங்களோட உண்மையான நோக்கம் என்ன-னு தெரிஞ்சுக்கணும்-ங்கறது ஒரு பொருள்!!

உட்பொருள் 2 : நம்மளோட அம்மா, அப்பா, கூட பொறந்தவங்க, நண்பர்கள், சொந்தக்காரங்க, கூட வேல பாக்கறவங்க-ன்னு, நம்ம சுத்தி இருக்கறவங்க பேசும் போது, அவங்க சொல்ற வார்த்தைகள மட்டும் பாக்காம, எந்த மனநிலைல இருக்காங்க, ஏன் அப்படி சொல்றாங்க, என்ன சொல்லவறாங்க அப்படிங்கறதெல்லாம் தெரிஞ்சுக்கணும்-ங்கறது இன்னொரு பொருள்!!
உதாரணமா, நான் சரியா படிக்காம 40% மார்க் வாங்கிட்டு மார்க் ஷீட்ட எடுத்துட்டு வீட்டுக்கு போறேன். மார்க் ஷீட்ல அப்பா கையெழுத்துப் போடும்போது, ‘நீ உறுப்புடவா போற? எங்கேயாவது மளிகக் கடைல புளி விக்கதான் போற!!’-னு திட்றாரு. நான் உறுப்புடாம போய்டுவேன்-னா எங்க அப்பா நெனைக்கிறாரு? அது வெறும் வார்த்தைலதான. அதோட மெய்ப்பொருள்?? நான் அப்படி ஆயிடக் கூடாதுங்கறதுதான??.

உட்பொருள் 3: ‘உன்னப்பத்தி கணேசன் இப்படி சொன்னான், குமரேசன் அப்படிச் சொன்னான்’-னு நம்ம கிட்ட வந்து சொல்ல எப்பவும் யாராவது இருந்துட்டேதாங்க இருப்பாங்க-ங்க. அவங்க சொல்ற விஷயங்கள் பெரும்பாலும் நல்ல விஷயங்களா இருக்காது. ‘அப்படியா சொன்னான் கணேசன்? ஒரு கை பாத்துடறேன் அவன!!’ அப்படி-னு நாம ஏதாவது செஞ்சா அது அவங்களுக்கு சந்தோஷம். அவங்க சொல்றது உண்மையா? கணேசன் அப்படி சொன்னானா?? இவங்களா சொல்றாங்களா??? அவன் சொன்னாலும் நம்மகிட்ட சொல்றதுனால சொல்றவங்களுக்கு என்ன பயன்?? நாம ‘ஒரு கை பாக்கறதுனால’ சொல்றவங்களுக்கு என்ன பயன்?? இதெல்லாம் தெரிஞ்சுக்கிட்டு முடிவெடுக்கணும்-ங்கறது இன்னொரு பொருள்!!

‘உன்னப்பத்தி கணேசன், குமரேசன்-ட்ட இப்படி சொல்லியிருக்கான். குமரேசன், பரமசிவத்துட்ட சொன்னான்-னு, பரமசிவம் என்ட சொன்னான்’-னு யாராவது உங்ககிட்ட சொன்னா, நீங்க என்ன சொல்லுவீங்க?? :) (அப்பா!! மூச்சு வாங்குது!! :) )

உட்பொருள் 4: (Words travel and get changed. Moods won’t travel) ஒருத்தர் இன்னொருத்தர்கிட்ட ஒரு விஷயத்த சொல்லும்போது, அவர் சொல்றத, கேட்கிறவர் எப்படிப் புரிஞ்சுகிட்டாரோ அததான் வெளில சொல்றார், எல்லாத்தையும் புரிஞ்சுகிட்டாரா-னும் தெரியாது. அதேபோல வெளில சொல்லும்போதும், வெறும் வார்த்தைகளத்தான் வெளில சொல்றாரே தவிற, சொன்னவரின் உணர்ச்சிகளை இல்ல. முதல்ல சொன்னவர் உணர்ச்சிவசப்பட்டு சொன்ன வார்த்தைகள், கேட்டவர் வழியா இன்னொருத்தருக்குப் போகும்பொழுது, வெறும் வார்த்தைகளா, அதுவும் வேறு விதமாத்தான் போகுது.
அதுனால, நமக்கு இரண்டாவது அல்லது மூன்றாவது நபர்கள் மூலமாக வரும் செய்திகள், வெறும் வார்த்தைகள்தான். அதோட உண்மைகள, உணர்ச்சிகள நாம தெரிஞ்சுகிட்டப்புறம்தான் செயல்படணும்-ங்கறது இன்னொரு பொருள்.

நான் சொல்ல நினைச்சத முழுசா சொல்ல, முடிஞ்ச வரைக்கும் முயற்சி செஞ்சிருக்கேன். :)