Congratulations Indian Team!!!

20 ஓவர்கள் உலகக் கோப்பையை வென்ற இந்திய அணிக்கு வாழ்த்துக்கள்.
வெளையாட வந்த கொஞ்ச நாட்கள்லயே எல்லோர் மனதையும் கவர்ந்த தோனி இப்போ கேப்டனா ஆகி வெற்றி வாகைய சூடியிருக்காரு. இவர் மட்டும் என்னத்த மாத்திடப்போறாரு-ன்னு நெனைச்ச எனக்கு, அவரோட அப்ரோச் ரொம்ப பிடிச்சிருந்தது. இங்கிலாந்து அணியோட ஜெயிச்சதுக்கப்புறம் கொடுத்த பேட்டில, ‘நாங்க 100% உழைப்பை கொடுக்க தயாரா இருக்கோம். வெற்றியைப் பத்தி அவ்ளோவா அக்கறை இல்லை.’-ன்னு சொன்னது, மற்ற வீரர்களோட தோல்கள்ல இருந்து பெரிய சுமைய இறக்கினது மாதிரி இருந்தது. நானும் (இறுதிப்போட்டிக்கு முந்தைய போட்டி வரைக்கும்) நம்ம வீரர்களோட விளையாட்டை ரசிக்க முடிஞ்சுது. வெற்றிபெற்றே ஆகணும்-ங்கற எதிர்பார்ப்பு கம்மியாத்தான் இருந்தது. ஒவ்வொருத்தரும் டெடிகேட்டடா விளையாண்டத ரசிக்க முடிஞ்சது.

தோனி முகத்துல இருந்த பொறுமை அபாரம். ஷ்ரீஷாந்த், கொஞ்சம் உப்பு காரத்தை கொறைக்கணும்!! :) கைல வீச்சருவா இருந்திருந்தா எதிரணிகாரங்கள வெட்டியிருப்பாரு போல!! வேகம் இருக்கலாம் கோபம் வேணுமா??
என்னோட இன்னொரு ஃபேவரைட் இர்ஃபான். Welcome back dude!!.
யுவ்ராஜ். Well done dude!! பேர கேட்டா இங்கிலாந்தே அதிருதுல்ல!!(‘ஆஹா நீங்க ஒரே நாள்ல எந்த Bug-குமே இல்லாம, ரொம்ப நல்லா ப்ரோக்ராம் எழுதி, ப்ரொடக்ஷனுக்கு அனுப்பிட்டீங்க’-ன்னு சொல்லி நமக்கு யாரும் ஒரு கோடி தந்தா எப்டி இருக்கும்!! :) )

வேகப்பந்து வீச்சாளர்களே இந்தியாவுல இல்லாமலா போய்ட்டாங்க-ன்னு ஏங்கிகிட்டு இருந்தவங்களுக்கும், ‘பில்டிங் ஸ்ட்ராங்கு ஃபீல்டிங்தான் வீக்கு’-சொல்லி வருத்தப்பட்டவங்களுக்கும், ஓப்பனர்ஸ் அவுட் ஆனவுடனேயே TVயையும் அவங்க நம்பிக்கையையும் சேர்த்து ஆஃப் பண்றவங்களுக்கும், இந்தப் புதிய இரத்தம் நிச்சயமா உற்சாகமூட்டும்.

ஒவ்வொருத்தரும், அவங்களோட 100% உழைப்பைக் கொடுத்துப் பறித்த வெற்றிக்கனி.

இந்த வெற்றிகள் தொடற இனிய வாழ்த்துக்கள்.

(BTW ஷாருக் அங்கிலுகுக்கு வயசாயிடுச்சோ!! கொஞ்சம் மைக்கேல் ஜாக்சன் சாயல் வேற தெரியறமாதிரி இருக்கு!! :) )