பசி.
கொஞ்ச நாளைக்கு முன்னாடிதான் கெவின் கார்ட்டர்-ங்கறவரைப் பற்றி கேள்விப்பட்டேன். Photojournalist. 1993-ல சூடான் நாட்டுக்கு, அந்த நாட்டோட நிலைமையைப்பத்தியும், உள்நாட்டு கலவரங்களையெல்லாம் படம் எடுக்கவும் போயிருக்காரு. அங்க பசிப் பேய் தலைவிரித்து ஆடினத பார்த்துட்டு அதைப் படம் பிடிக்க ஆரம்பிச்சிருக்காரு. ஒரு சிரிய பெண் குழந்தை உணவு வழங்கும் இடத்துக்கு போகும் வழியில், நகர்ந்து போக சக்தியில்லாமல் கிடப்பதையும், ஒரு கழுகு அந்தக் குழந்தையின் மரணத்தை எதிர்பார்த்து காத்திருப்பதையும் படம்பிடிச்சிருக்கிறாரு. சூடான்ல இருந்து போனதுக்கப்புறமும் அந்தக் குழந்தை என்னவானதோ-ன்னு சொல்லி பலபேரிடம் வருந்தி சொல்லியிருக்காரு. அவர் எடுத்த அந்தப் போட்டோவையும் இந்தப் பதிவுல போடலாம்-ன்னு நெனைச்சேன். இன்னமும் அந்தப் படம், எனக்கும் ஒரு வருத்தத்தை ஏற்படுத்தறதுனால போடலை. (You can google it.)
இன்னொரு போட்டோ, மனதை மிகவும் நெகிழவைக்கற, நெறைய மன அதிர்வுகளை ஏற்படுத்தற போட்டோ, எமிரேட்ஸ் ஏர்லைன் விமானங்கள்ல சாப்பாட்டுத்தட்டுல, சாப்பாட்டுக்கு கீழ வைக்கற பேப்பர்ல இருக்குற இந்தப் போட்டோ.
எமிரேட்ஸ் விமான நிறுவனம் நடத்தும் தொண்டு நிறுவனத்துக்கு நிதி தரச்சொல்லி கேக்கறதுக்காக இந்தப் படத்த போட்டிருக்காங்க. ஆயிரம் வார்த்தைகள் சொல்லாத உணர்வுகளை ஒரு போட்டோ சொல்லிடுது!!
‘தனியொருவனுக்கு உணவில்லையெனில் ஜகத்தினை அழித்திடுவோம்’-ன்னு பாரதி ஒரு வேகத்துல சொல்லிட்டாலும் அழிச்சுடவா முடியுது? அதுவா தீர்வு??