ராமர் சேது.

ஒரு மாநிலத்தோட முதலமைச்சரா இருக்கறவரு கோடிக்கணக்கான மக்களோட நம்பிக்கையா இருக்கற ஒரு விஷயத்தைப் பத்தி பேசும்போது பொறுப்போட பேசவேண்டாமா? தேவையில்லாத வீண் கமெண்ட்டுகள் அடிக்கலாமா? சேது சமுத்திரத் திட்டம் முக்கியம்தான். அதுக்காக, ‘ராமர் இஞ்சினியரா’, ‘அவரே பாலத்தைக் கட்டினாரா’-ங்கற கமெண்ட்டெல்லாம் தேவையா?

சில விஷயங்கள்லாம் மக்களோட நம்பிக்கைகள். அதையெல்லாம் ஆராயக்கூடாது. ராமரை கடவுளாக பாக்கறவங்க, நம்பறவங்க, வணங்கறவங்க எத்தனை கோடி பேர் இருக்காங்க. தமிழகத்துல மட்டும் இல்ல. உலகம் பூரா. அத்தனை கோடி மக்களோட உணர்வுகளை மதிக்க வேண்டாமா!! கடவுள் பத்தி ஒரு தலைவருக்கு என்ன கருத்து வேணும்னாலும் இருக்கலாம். ஆனா, அவரோட சொற்கள்ல, செயல்கள்ல அவரைத் தலைவரா தேர்ந்தெடுத்த மக்களோட உணர்வுகளுக்கு கொடுக்க வேண்டிய மரியாதை இருக்க வேண்டாமா? இவர் மாட்டுக்குக்கும் கேனகேளித்தனமா வார்த்தைகள விட, தலைய வாங்குவேன்னு ‘இன்னொன்னு’ ஸ்டேட்மெண்ட் விடுது. எங்க போயி முட்டிக்கறது?

ரமேஸ்வரம் கோவிலோட பெருமையையும், மக்களோட பெருமையையும் அப்துல் கலாம் அவரோட அக்னிச் சிறகுகள்ல எவ்ளோ அழகா சொல்லியிருக்காரு. எல்லா மத நம்பிக்கைகளையும் எப்டி மதிச்சு விவரிக்கறாரு. அதுசரி, அவரு அரசியல்வாதி இல்லயே!!

‘இப்டி ஒரு ஸ்டேட்மெண்ட் விட்டா மக்கள் இதைப் பத்தியே பேச ஆரம்பிச்சுடுவாங்க. அங்கங்க சண்டைகள் நடக்கும். மாத்தி மாத்தி ஸ்டேட்மெண்ட் விடலாம். கொஞ்ச நாளைக்கு சேது சமுத்திர திட்டங்களையும், செலவுக்கணக்குகளையும் பத்தி யாரும் யோசிக்க மாட்டாங்க, மறந்துடுவாங்க’-ன்னு ஒரு “ராஜ”தந்திரத்தோட ஸ்டேட்மெண்ட் விட்டாரோ என்னவோ!! இல்ல, கூட்டணிக் கட்சித் தலைவர்கள் வேற விஷயங்களைப் பத்தி பேசாம இருக்க மீடியாவோட வாய்க்கு போட்ட அவலா கூட இருக்கலாம்!!

இதுனாலா யார் யாருக்கு என்னென்ன அரசியல் லாபங்கள்-ன்னு நம்ம அறிவுக்கு எங்க எட்டப்போகுது!!