Exam Fees for 10th and +2.

தமிழ் மீடியத்துல படிச்சு 10ம் வகுப்பு 12ம் வகுப்பு எழுதும் மாணவர்களுக்கு தேர்வுக்கட்டணம் ரத்து-ன்னு அரசாங்கம் அறிவிச்சிருக்கு.

பேரூராட்சி மற்றும் நகராட்சிகள் அரசாங்கத்துகிட்ட இருந்து வாங்கின பல கோடி ரூபாய் கடன்களை சர்வ சாதாரணமா தள்ளுபடி செய்யற அரசாங்கம், முதல் முறையா, பள்ளிகள் வழியா தேர்வு எழுதற எல்லா 10ம் வகுப்பு 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் ஏன் தேர்வுக்கட்டணத்தை ரத்து செய்யக்கூடாது!!

“தமிழை வளர்க்கறதுல இந்த அரசாங்கம் கொண்டுள்ள அக்கறை வேற யாருக்கும் கிடையாது!!”-ங்கற மாதிரி ஒரு இமேஜை இவங்களே க்ரியேட் பண்ணிக்கறாங்க. “தமிழ் பெயர்கள் வைத்தால் தமிழ் சினிமாக்களுக்கு கேளிக்கை வரி இல்லை”-ன்னு சொல்லிட்டா தமிழ் கூறும் நல்லுலகத்துக்கே ஒரு பெரிய தொண்டு செஞ்சுட்டதா நெனைப்பு இவங்களுக்கு!!

உண்மையா தமிழை வளர்க்கறவங்க, தமிழை இணையில்லா உயரத்துக்கு கொண்டு போற நல்லவங்க, தமிழை இணையத்துக்கு கொண்டுவர்றவங்கதான். எத்தனையோ தமிழ்க் காவியங்களை இணையத்துக்கு கொண்டு வந்திருக்குற மதுரைத் திட்ட/த்துக்கு ஒரு பெரிய பங்கு உண்டு. இங்க, விவிலியம், சீறாப்புறாணம், பகவத் கீதை, சிலப்பதிகாரம், இன்னும் எவ்ளவோ இருக்கு. இவங்க அரசாங்கத்துட்ட இருந்து ஒரு பைசா கூட எதிர்பார்க்கல!!

இன்னும், இணையம் வழியா நல்ல விஷயங்களைத் தமிழ்ல எழுதறவங்க, மத்த மொழிகள்ல இருக்கற நல்ல விஷயங்களைத் தமிழ்ப்படுத்தறவங்க, அறிவியல் கட்டுரைகள் ஆய்வுக்கட்டுரைகள் எழுதறவங்க-ன்னு எவ்ளவோ பேறு தமிழோட ஆயுள் ரேகைய நீளமா ஆக்கிட்டு இருக்காங்க.

இவங்களையெல்லாம் விட்டுட்டு, தமிழ் சினிமாப் பேர்லயும், தேர்வுக்கட்டணத்துலயும் தமிழை வளர்க்கப் பாக்கறாங்க!!