உயிரின் விலை.

ஒரு உயிரோட மதிப்பை மக்களுக்கு எப்போதான் புரியும்-ன்னு தெரியல. உயிர் போனதுக்கப்புறம் நஷ்டஈடு கொடுத்தா சரியாயிடுமா? உயிரின் விலை அவ்ளோதானா?

கோவைல இடிஞ்ச வீடுகளுக்கு 5 மாசம் முன்னாடியே காலிபண்ண சொல்லி அரசாங்கத்துல இருந்து நோட்டீஸ் கொடுத்துட்டோம். காலி பண்ணாம இருந்தது அவங்க தப்பு-ங்கற மாதிரி சொல்றாங்க. தங்கியிருக்கற வீடுகளை காலி பண்ணிட்டு போங்க-ன்னா எங்க போவாங்க? மாற்று வீடுகள் கட்டிக் கொடுத்துட்டு அங்க போக சொன்னா போவாங்க. முகாம்ல போயி இருக்க சொன்னா எப்டி போவாங்க. இத்தனை நாட்கள்ல மீண்டும் வீடுகள் கெடைக்கும்-ங்கற உத்திரவாதமாவது உண்டா? அதுவும் இல்லை.

12 உயிர்கள் பலி- செய்தி வாசிச்சிட்டு அதை மறந்துடறாங்க. அந்த குடும்பங்களுக்கு அந்த இழப்புகள் எற்படுத்தியிருக்கற பாதிப்புகளை யாரும் யோசிக்கறது இல்ல.

அரசாங்கத்துல இருந்து முடிவுகளை எடுக்கும் அதிகாரம் யார்கிட்ட இருக்கு-ன்னே தெரியல. நோட்டீஸ் கொடுக்கறது ஒரு அதிகாரி. அதோட அவர் வேலை முடிஞ்சிடுச்சு. அதை செயல்படுத்தறது அவர் வேலை இல்ல. மாற்று வீடுகள் இருக்கான்னு பாக்கறதும் அவர் வேலையில்ல. மாற்று வீடுகள் ஏற்பாடு பண்ற அதிகாரிகளுக்கு, இருக்கற கட்டிடங்களோட நிலைமை 12 பேர் மரணத்துக்கு அப்புறம்தான் தெரியுமா?

இடிந்த கட்டிடங்கள் இடிஞ்சு விழறதுக்கு முன்னாடியே போலீஸ், பத்திரிக்கைக்காரங்க-ன்னு எல்லோரும் அங்க போயிட்டாங்க. மக்கள் அவங்களோட பொருட்களை எடுக்கறதுக்காக உள்ளே போயிருக்காங்க. அவங்களை போலீஸ்காரங்க தடுத்திருக்க வேண்டாமா. ஒரு சின்ன பொன்னு புத்தகப்பைய எடுக்க உள்ளே போயி பலியாயிருக்கு. அதைக்கூடவா தடுக்க முடியல?

போகக்கூடிய உயிர்கள பாதுகாக்கற வாய்ப்புகள் இருந்தும் நழுவ விட்டுடறாங்க. ஏன்னா அது அவங்களோட வேலை இல்ல. இன்னும் மோசம் என்னன்னா அதுக்காக யாரும் வருத்தப் படறதே இல்ல. ‘செத்தா அது அவங்களோட விதி’-ன்னு சொல்லிடறாங்க.

கொஞ்ச நாள் முன்னாடி திருச்சி தஞ்சாவூர் ரோட்ல, என் கண் முன்னாடி ஒரு சாலை விபத்து நடந்துடுச்சி. கார்ல போன எனக்கு கை கால்கள் வெலவெலத்துடுச்சு. காரை ஓரமா நிறுத்திட்டு கிட்டபோனேன். அடிபட்டவருக்கு இன்னும் உயிர் இருந்துச்சு. கிட்ட வந்து பார்த்த போலீஸ் காரங்க, ‘இது தேராது சார்’-ங்கறாங்க. உயிர் பிழைப்பாரா மாட்டாராங்கறதை சொல்ல அவர் யாரு?? டாக்டரா?? இல்லை கடவுளா?? ஆஸ்பத்திருக்கு எடுத்துட்டு போகலாம்-சார்-ன்னு ஒருத்தர் சொல்ல, அதுக்கு ‘ஆட்டோக்காரன் எவனும் வரமாட்டான் சார்’-ங்கறாரு போலீஸ் அதுக்கான முயற்சி எதுவுமே எடுக்காமலே. ‘சார் என் கார்ல சூட்டிட்டு போய்டலாம் சார்’-ன்னு அவசரமா நான் சொல்ல, பக்கத்துல இருந்தவங்க அதுக்கான முயற்சில எறங்கினாங்க. ஸ்ட்ரெச்சர் இல்லாம கார்ல கொண்டுபோக முடியாது-ன்னு சொல்லிட்டாங்க. ஆம்புலன்ஸ் வர்றதுக்கு ஒரு 10-15 நிமிஷம் ஆய்டுச்சு. அவங்க வந்து கூட்டிக்கிட்டு போனப்புறமும் அங்கேயிருந்து போக முடியாம ரொம்ப நேரம் நின்னுட்டு இருந்தேன்.

ஆக்ஸிடெண்ட் பண்ண லாரி ட்ரைவர் லாரில இருந்து இறங்கி ஓடிட்டான், போலீஸ்காரருக்கு அடிபட்டவன் பிழைப்பான்னு ‘தோனல’, அங்க இருந்த மக்களுக்கு லாரி ட்ரைவரை பிடிச்சு அடிச்சு உதைக்கணும், விபத்துகள் நெறைய நடக்கற எடமா இருந்தும் பக்கத்துல மருத்துவமணையோ, அவசர முதலுதவி மையமோ, ஆம்புலன்ஸ் வசதியோ இல்லை, பின்னாடி ஆம்புலன்ஸ் வர்றது தெரிஞ்சும், வழிவிடணும்-ங்கற எண்ணம் துளியும் இல்லாம அவசரமா முந்திட்டு போற மற்ற வாகணங்கள், இவ்வளவையிம் மீறி அடிபட்டவன் உயிர் பிழைச்சான்னா ‘அவனுக்கு ஆயுசு கெட்டி’ இல்லைன்னா ‘அது அவன் விதி’.