மழை.. மழை.. மேலும் மழை..

அப்ப்ப்ப்பா… இதுமாதிரி ஒரு மழைய நான் இதுவரைக்கும் பார்த்ததே இல்லை. சென்னைல 24 மணி நேரத்தையும் தாண்டி தொடர்ந்து பொழியுது. ஒரு வினாடி கூட விடாம!! பெருசா இடியோ, மின்னலோ இல்லை. டெஸ்ட் மேட்ச் மாதிரி ஸ்லோ அண்ட் ஸ்டெடியா பொழியுது. இடிகள் இல்லாத கொறைய அப்பப்போ காத்துல ஆடும் ஜன்னல் கதவுகள் பூர்த்திசெய்யுது. சில நேரங்கள்ல சத்தமே இல்லாததால மழை விட்றுச்சோ-ன்னு எதிர்பார்த்து வெளில போயி பார்த்தா ஹூஹும். 4 மணி நேரம் 5 மணி நேரம் மழை விடாம பொழிஞ்சதெல்லாம் பார்த்திருக்கேன். 24 மணி நேரத்துக்கும் மேல விடாம பொழியறத இப்போதான் பார்க்கறேன்.

எங்க வீட்ல பால்கனிகள் நிறம்பி வீட்டுக்குள்ள தண்ணி வருது. பால்கனில இருந்து வெளியே போற தண்ணீரோட அளவோட அதிகமா மழை நீரை கொண்டுவந்து சேர்த்துகிட்டு இருக்கு!! மொட்டைமாடில தண்ணீர் போற வழி அடைச்சு மேற்சுவர்ல எல்லாம் ஈரம் வரைபடம் வரைஞ்சிருக்கு. காலைல இருந்து ஒரே இருட்டு மயம்தான். குளிர்சாதனப்பெட்டி வெச்சு சென்னையையே குளிர வெச்சமாதிரி ஒரு உணர்வு. வீட்டு வாசற்கதவு ரெண்டுநாளா ஈரக்காற்றையே சுவாசிக்கறாதால கொஞ்சம் பூரிப்பு அடைஞ்சு நிலைக்கு அடங்காம திமிருது.

வெளில, மழை விட்டுடும், இதோ 5 நிமிஷத்துல கெளம்பிடலாம், 10 நிமிஷத்துல கெளம்பிடலாம்-ன்னெ ரெண்டு சக்கர வாகன பயனிகள்ல சாலையோரத்துக் கடைகள்ல ஒதுங்கினவங்க ஒரு மணி நேரம் ரெண்டு மணி நேரம் ஆகியும் மழை நிக்காத்தால மழைலயே கெளம்பி நனைஞ்சுகிட்டே போறாங்க.

மழைனால கடைகள்ல கூட்டம் ரொம்ப கம்மிதான். மதியம் வடபழனி ராஹத் ப்ளாஸால இருக்குற சில கடைகளுக்கு போனேன். வழக்கத்தை விட ரொம்ப கம்மியான பேர்தான் கடைகள்ல இருந்தாங்க. இந்த விடாத மழைலயும் வாடிக்கையாளர்கள் குறையாத ஒரே கடை டாஸ்மாக்தான்.

ரெண்டு நாளா வெயில் இல்லாததால வீட்ல துவைத்து காயவைக்க முடியாத துணிகள்ல இருந்து லேசா பேட் ஸ்மெல் வர ஆரம்பிக்குது.

மிகைப்படுத்தாம சொல்றேன். கொறைஞ்சது ஒரு 500 தவளைகளாவது இருக்கும். வீட்டைச்சுத்திலும் இருந்துகிட்டு டால்பி டிஜிட்டல் சரவுண்ட் சவுண்ட்ல சிம்பனி இசை மாதிரி பாடிட்டு இருக்கு. பல குரல்கள் சேர்ந்த ஒரு கோரஸ், ஒரு பக்கம். அதுக்கு துணையா இன்னொரு கூட்டத்துல இருந்து கோரஸ் ஒருபக்கம். உன்னிப்பா கவனிச்சா சில லீட் வாய்ஸ்-ன்னு பல தவளைகள் தங்களோட திறமைகள காட்டிகிட்டு இருக்கு!!

அமெரிக்கால, நியூயார்க் நகரத்துல ஒரு நாள் முழுக்க கரெண்ட் இல்லாம போயிடுச்சு. அன்னில இருந்து 10 வது மாசம் நியூயார்க் மருத்துவமணைகள்லாம் நெறைஞ்சிடுச்சாம். பிரசவ வார்டுகள்லாம் ஹவுஸ் ஃபுல்லாம். அதுமாதிரி சென்னைலயும் நடந்தாலும் ஆச்சரியப்படறதுக்கு இல்ல!! :)