கதையில் அமைத்து எழுது!!

ஒரு கதைய புத்தகத்துலயோ, நாவலாகவோ, இல்லை, வார இதழ்களிலோ படிக்கறதுக்கும், இணையத்துல படிக்கறதுக்கும் ஒரு பெரிய வித்தியாசம் இருக்கு. இணையத்துல படிக்கும்போது ஒரு எக்ஸ்ட்ரா டைமென்ஷன் இருக்கு-ன்னு நெனைக்கறேன். புத்தகத்துலயோ, வாராந்திர இதழ்கள்லயோ கெடைக்க முடியாத ஒரு டைமென்ஷன். நான் எந்த டைமென்ஷன சொல்றேன்னு இந்தப் பதிவோட முடிவுல இன்னும் கொஞ்சம் பெட்டரா புரியும்.

பள்ளிக்கூட நாட்கள்ல, தமிழ்த் தேர்வுகள்ல, ஒரு வார்த்தை கொடுத்துட்டு அதை ‘வாக்கியத்தில் அமைத்து எழுது’-ன்னு சொல்லுவாங்க.

வாக்கியத்தில் அமைத்து எழுது: ‘ஒளிர்கிறது’ -ன்னு கேட்டா.

“தீபாவளி மத்தாப்புகளைப்போல இந்தியா ‘ஒளிர்கிறது’”-ன்னு எழுதினா ஒரு 1/2 மதிப்பெண்கள் கொடுப்பாங்க.

அதுமாதிரி ஒரு முயற்சிதான் இது. ‘கதையில் அமைத்து எழுது’!! வாங்க நேரா கதைக்கு போயிடலாம்.

வசந்தி
“சாயங்கால சூரியனு-க்கு எப்பவுமே ஒரு அழகு உண்டுடி. என்னமா ஜொலிக்குது பாரு. இந்த சூரியனை கடற்கரைல நின்னு பாக்கணும். கரைல கொஞ்சமா குன்றுகள் இருக்கணும். அதுல உக்காந்து கடல் அலைகளோட சுருதியோட சேர்ந்து பாடணும்! சிந்துபைரவில சிவக்குமார் பாடுவாரே அதுமாதிரி..
தொம் தொம்தொம்தனம்தத்தொம்தொம் னம்த…
யேய்! அடியே ஆனந்தி!!
நான் மாட்டுக்கு பேசிட்டு, பாடீட்டு வர்றேன் நீ எங்கேயோ பார்த்துகிட்டு வர்ற!! என்னடி ஆச்சு உனக்கு??”

“ஒன்னும் இல்லடி”

“நீ ஒன்னும் இல்லை-ன்னு சொல்றதுலயே தெரியுது. அந்தப் பாழாப்போன குமரன் திட்டினத யோசிச்சிட்டு இருக்கியா?”

“இல்லடி, நான் ஒரு தப்புமே செய்யாம இருக்கும்போது அவன் வந்து அப்படித் திட்டினானே-ன்னுதான் கோவமா வருது. நான் சொல்ல வந்தத சொல்லவேவிடல அந்த சண்டாளன்”

“அவனுக்கு பெரிய சண்டியர்-ன்னு நெனைப்பு. நீயும் கேட்டுகிட்டே இருக்கறதாலதான் அவன் உன்னையே எப்பவும் சீண்டறான். ரமேஷ்கூட ஏன் பேசறன்னும் திட்டுவான். அவனோட அண்ணன் ராகவனோட ஏன் பேசறன்னும் திட்டுவான். எனக்கு வந்த கோவத்துக்கு அங்கேயே பளார்-ன்னு ஒன்னு குடுத்திருப்பேன். நீ அப்புறமா ஏதாவது சொல்லுவியோன்னு விட்டேன்”

—————-

“யே!! யே! வசந்தி ஒரு பாட்டு பாடுடி”

“ப்ளீஸ்பா ஒரு நல்ல பாட்டா பாடுப்பா”

“அவளுக்கு பீச்சுல உக்காந்து பாடினாதாண்டி பாட்டு வரும்!!”

“பாட்டுன்னொன்னா ராமரஸம் மிளகு ரஸம்-ன்னு பாட ஆரம்பிச்சுடப்போறாடி!!”

“இருங்கப்பா!! ஆளுக்காளு எதாவது சொல்லாதீங்க. நம்ம ஆனந்திகிட்ட ‘சண்டியர்’ குமரன் ஒரு ரோஜாப்பூ கொடுத்து ‘ஐ லவ் யூ’-ன்னு சொல்றான், அந்த சிச்சுவேஷனுக்கு ஒரு சினிமா பாட்டு பாடுடீ!!”

“ஏய்.. சும்மா இருக்க முடியாதா! எதுக்குடி என் தலைய உறுட்றீங்க!!”

“அட.. இருங்கப்பா!! பாட்டு வேணும்.. அவ்ளோதான.. இரு பாடறேன்”

——————————

“வா வா வா ஆனந்தி! எப்டி இருக்க? பாத்து எத்தனை வருஷம் ஆயிடுச்சு”

“ஹாய் வசந்தி.. எப்டி இருக்க?”

“நல்லா இருக்கேன். நீ எப்டி இருக்க? உள்ள வா. வந்து உக்காரு. இவங்கதான் என் மாமியார்”

“வணக்கம்- ஆண்ட்டீ”

“வாம்மா. நீ வருவன்னு வசந்தி காலைல இருந்தே காத்துகிட்டு இருக்கா. உக்காந்து பேசிட்டு இருங்க. நான் கொஞ்சம் வெளில போய்ட்டு வந்துடறேன். அவளுக்கு குடிக்க ஏதாவது குடும்மா வசந்தி!!”

“சரிங்கத்தை. சொல்டி, என்ன சாப்டற காஃபி டீ-யா இல்ல கூல் ட்ரிங்க்ஸ்-ஸா?”

“ரொம்ப நாளாச்சுடி ‘ஒன் பை ட்டூ’ டீ சாப்ட்டு”

“அதையெல்லாம் மறக்காம இருக்க!! இரு டீ போட்டு எடுத்துட்டு வர்றேன்”

“வீடெல்லாம் சுத்தமா வெச்சிருக்க! என் வீடு அலங்கோலமா இருக்கும்.’

“ம்ம்ம். உங்க வீட்ல எல்லோரும் எப்டி இருக்காங்க. ‘சண்டியர்’ உன்ன நல்லா வெச்சிருக்கானா? அவங்க வீட்ல எல்லோரும் நல்லா பழகறாங்களா?”

“‘சண்டியர்’ நல்லாத்தான் பாத்துக்கறாரு. அவங்க வீட்ல ஆரம்பத்துல கொஞ்சம் மொறண்டு பிடிச்சாங்க. குழந்தை பொறந்தப்புறம் எல்லாம் சரியாய்டுச்சு”

“எத்தனை பசங்கடீ உனக்கு?”

“ரெண்டு. மூத்தது பொண்ணு, செகண்ட் ஸ்டாண்டர்ட் படிக்கறா. ரெண்டாவது பையன். மூனு வயசாகுது. அறுந்த வாலு, அப்டியே அவங்க அப்பா மாதிரியே!! வீட்டை அலங்கோலப்படுத்தறதுதான் அவன் வேலை…

உனக்கு எத்தனை பசங்க? உங்க வீட்டுக்காரர் என்ன பண்றாரு?? காலேஜ்ல படிச்ச காலத்துலயே, ’10 புள்ள பெத்துக்குவேன்’ ‘கல்யாணி, காம்போதி-ன்னு ராகம் பேரா வெப்பேன்’னெல்லாம் சொல்லிட்டு இருப்பியே!! எத்தனை பெத்துகிட்ட?? உன் பசங்களுக்கு என்ன வயசுன்னு தெரியல. அதுனால என் பசங்களுக்கு வாங்கற மாதிரியே ட்டாய்ஸ் வாங்கிட்டு வந்தேன். இந்தா!! எங்க அவங்க??”

“எனக்கு குழந்தை இன்னும் இல்லடி!”

“அடிப்பாவி! ஏண்டீ? நாலஞ்சு வருஷத்துக்கு முன்னாடியே கல்யாணம் பண்ணிகிட்டதா கேள்விப்பட்டேன்??”

“குடும்ப சூழ்நிலை அப்டிடீ”

“அப்டி என்னடி சூழ்நிலை? உன் வீட்டுக்காரர் என்ன பண்றாரு?”

“துபாய்ல இருக்காரு”

“துயாய்லயா? எப்போ போனாரு?”

“கல்யாணம் முடிஞ்சு ஒரு மாசத்துல போனாரு. அவருக்கு ரெண்டு தங்கச்சிங்க, அப்பா இல்லை. ரெண்டு பேருக்கும் கல்யாணம் ஆகற வரைக்கும் குழந்தை வேண்டாம்-ன்னு சொன்னாரு”

“அதுக்காக எத்தனை வருஷமா?”

“அவர் போயி 4 வருஷம் ஆகப்போகுது”

“நாலு வருஷமா வரவேயில்லையா?”

“இல்லடி. முதல்ல ரெண்டு வருஷம் காண்ட்ராக்ட்லதான் போனாரு. ஆனா அதுக்கப்புறம் அங்கேயே வேற வேலை கெடைச்சதால லீவு கெடைக்கலை. போயி ரெண்டு வருஷத்துல அவரோட முதல் தங்கச்சிக்கு கல்யாணம் பண்ணிட்டோம்.”

“கல்யாணத்துக்குகூட வரலியா??”

“இல்ல. லீவு கெடைக்கலயாம். ரெண்டாவது தங்கச்சி கல்யாணத்துக்கு வர்றேன்னு சொல்லிட்டாரு”

“அது எப்போ?”

“ஒரு வரன் பாத்திருக்கோம். அவ இப்போதான் BSc கடைசி வருஷம் படிச்சுகிட்டு இருக்கா. எக்ஸாம் முடிஞ்சொன்ன கல்யாணம் வெச்சுக்கலாம்-ன்னு மாப்பிள்ளை வீட்ல சொல்லியிருக்காங்க. அவரோட முதல் தங்கச்சிக்கும் ரெண்டாவது பிரசவம் அடுத்த மாசத்துல இருக்கும்-ன்னு டாக்டர் சொல்லியிருக்காரு. அந்த செலவு வேற இருக்குல்ல. அதுனால கொஞ்சம் தள்ளி வெச்சிருக்கோம்.”

“நாலு வருஷமா அவர கண்ணாலகூட பாக்காம எப்டிடீ இருக்க?”

“கஷ்டம்தான். அதுக்காக என்ன பண்றது? குடும்பம்-ன்னு ஆய்ட்டா எதையெல்லாம் சமாளிச்சுதான் ஆகணும். வாரம் ஒரு தடவை ஃபோன் பண்ணுவாரு. ஒரு பத்து பதினைஞ்சு நிமிஷம் பேசுவாரு”

“அப்ப்பா.. நெனைச்சுப் பாக்கவே கஷ்டமா இருக்குடி. கல்யாணம் ஆகி ஒரு மாசம் சந்தோஷமா இருந்துட்டு, அப்புறம் நாலு வருஷமா கட்ன புருஷன பிரிஞ்சு எப்டிதான் இருக்கியோ!! கன்னிகாஸ்த்ரியா ஆகறதுக்கு ட்ரெயினிங் எடுத்துக்கறவங்களோட இது ரொம்ப கஷ்டம்டீ. ஒரு மாசம் ‘விருந்து’ சாட்டுட்டு அப்புறம் நாலு வருஷம் விரதம்-ன்னு சொன்னா எப்டிடீ??”

“கஷ்டமாத்தான் இருக்கும். ஒவ்வொரு நேரம் ஒவ்வொருமாதிரி சமாதானம் சொல்லிப்பேன். சிலநேரம் புருஷனோட நல்ல மனசை நெனைச்சு மனச தேத்திக்குவேன். சிலநேரம், அவர்கூட ஃபோன்ல பேசினதையும், அவர்கூட இருந்த நாட்களையும் நெனைச்சு சந்தோஷப்பட்டுக்குவேன். சிலநேரம், நம்மளை மாதிரி இன்னும் எவ்வளவோ பேரு, அவங்களோட புருஷன்களை வெளிநாடு அனுப்பிட்டு இதே மாதிரிதான இருப்பாங்க-ன்னு நெனைச்சு மனச தேத்திப்பேன். சிலநேரம், ‘இதெல்லாம் இன்னும் கொஞ்ச நாளைக்குதான, அவரு திரும்ப வர்ற நாள் சிக்கிரமே வந்துடும்’-னு சமாதானம் சொல்லிப்பேன். இல்லைன்னா, இருக்கவே இருக்கு பாட்டு. எதாவது ஒரு பாட்டைப் உருக்கமாப் பாடினா மனசு லேசாய்டும்”

“என்னமோடி, நீ என்ன சொன்னாலும் எனக்கு சமாதானம் ஆகமாட்டேங்குது. உன் புருஷன் வந்து நீ சந்தோஷமா இருந்தாத்தான் சமாதானம் ஆகும்”

“உன்னைப் பாத்ததே மனசுக்கு ரொம்ப சந்தோஷமா இருக்குடீ”

“சரிடீ. நான் களம்பறேன். நீ இருக்கற எடம் தெரிஞ்சவுடனே அவசரமா கெளம்பி வந்துட்டேன். பொறுமையா இன்னொருநாள் வரேன். அடிக்கடி போன் பண்ணு. உன் புருஷன சீக்கிரமே வரச்சொல்லு. நான் அடுத்தவாரத்துல ஒருநாள் வர்றேன். நீயும் வீட்டுக்குவாடீ!!”

ட்ர்ரிங் ட்ர்ரிங்.. ட்ர்ரிங் ட்ர்ரிங்..

“கொஞ்சம் இரு ஆனந்தி. போன் அடிக்குது. பாத்துட்டு வந்துடறேன்.”
..
..
..
..
“என்னடி முகமெல்லாம் ஒரே பல்லா இருக்கு! யார் போன்ல?”

“அவர்தாண்டீ!! லீவு கெடைச்சுடுச்சாம்!!”

“வாவ் சூப்பர்டி.. இந்த சந்தோஷத்தை நீ பாட்டுப்பாடி கொண்டாடு. நான் கெளம்பறேன்.. பை பை!!”

(வசந்தியின் பாட்டு)[audio:http://www.sarav.net/wp-content//mannankurai.mp3]