ஆளையே காணோம்!!

மார்கழி மாசம் வந்துட்டா சென்னை கோலாகலமாய்டுது. நெறைய கண்காட்சிகள், எங்கே திரும்பினாலும் கர்னாட்டிக் கச்சேரிகள், புத்தகக் கண்காட்சி, கலை விழாக்கள்-ன்னு வண்ணமயமா ஜொலிக்குது.

மார்கழி மஹா உற்சவம்-ன்னு ஜெயா டிவில இசை நிகழ்ச்சிகளை ஒளிபரப்பறாங்க. அமெரிக்கால இருந்த வரைக்கும் அதுக்காக இணைய தளங்கள்ல காசுகொடுத்து பார்த்துகிட்டு இருந்தேன். ஆனா இந்த வருஷம் இந்தியால இருக்கேனா அதுனால மத்தவங்களுக்கெல்லாம் இலவசமா காட்டலாம்-ன்னு அந்த நிகழ்ச்சிகளை You Tube-ல போட்டுகிட்டு இருக்கேன். பதிவு செஞ்ச நிகழ்ச்சிகளை கணிணி-க்கு கொண்டுவந்து, அதை 10 நிமிட க்ளிப்புகளா கவனமா வெட்டி you tube-ல போடறதுக்கே நெறைய நேரம் செலவாயிடறதால இந்தப் பக்கம் வர முடியல. இன்னும் ஒரிரு நாட்கள்ல முடிச்சுடுவேன். இதுவரைக்கும் போட்ட நிகழ்ச்சிகளை youtube.com-ல bbsarav-ன்னு தேடினீங்கன்னா பாக்கலாம்.

உங்க எல்லோருக்கும் என்னோட இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.