பரிகாசம் – சந்தேகம்.

49:11. ஒரு சமூகத்தினர் இன்னொரு சமூகத்தினரைப் பார்த்து பரிகாசம் செய்ய வேண்டாம். நம்மால் பரிகாசத்திற்கு உள்ளாகுபவர், நம்மைவிட மேலானவராக இருக்கலாம். அதேபோல், பெண்களும், மற்ற பெண்களைப்பற்றி அவதூறு பேசவேண்டாம். நம்முள் ஒருவருக்கொருவர் பழித்துக்கொள்ளவோ, தீய சொற்களைப் பயன்படுத்தி அழக்கவோ வேண்டாம். இறைவன் மீது நம்பிக்கை உள்ளவர்கள் மற்றவர்களை தீய சொற்களால் அழைப்பது தவறு.

49:12. மற்றவர்கள் மீது சந்தேகப்படும்படியான எண்ணங்களை தவிர்ப்போம். அவை ஒருபோதும் நன்மை பயப்பதில்லை. மற்றவர் குறைகளை ஆராய்ந்துகொண்டிருப்பதிலேயும் மற்றவர்களைப் பற்றி புறம் பேசுவதிலுமே நம் நேரத்தை செலவிடக் கூடாது.