சமையல் vs கணக்கு.

இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து
அதனை அவன்கண் விடல்.

பொருள் : எந்த வேலையை, எந்த செயல்முறையில் செயல்படுத்தி, யாரால் சிறப்பாக முடிக்கமுடியும் என்று ஆராய்ந்து, அந்த வேலையை அவரிடம் கொடுக்க வேண்டும்.

எல்லா வேலையையும் எல்லாராலும் சிறப்பா செய்ய முடியறதில்லங்க. சிலபேர் நல்லா பாடுவாங்க. சிலபேர் நல்லா சமைப்பாங்க. சிலபேர் சிரிக்க சிரிக்க நல்லா பேசுவாங்க, சிலபேர் கணக்கு நல்லா போடுவாங்க, சிலபேருக்கு நல்ல ஞாபக சக்தி இருக்கும். நல்லா பாடறவங்களப்போய் சமைக்க சொன்னா எப்படிங்க சமைப்பாங்க? இன்னும் சொல்லப்போனா, என் மனைவி நல்ல சமைப்பாங்க. ஆனாலும், ஒரு கல்யாணத்துக்கு சமைக்கறப்போ, வேற சமையல்காரர வெலைக்கு வைக்கறோம். ஏன்? ஆயிரம் பேருக்கு சமைக்க என்னென்ன பண்ணனும்-னு அவருக்கு நல்லா தெரியுது.

இதத்தாங்க வள்ளுவர் சொல்றாரு. எந்த வேலைய, யாரு நல்லா செய்வாங்களோ, அவங்ககிட்ட அந்த வேலைய கொடு. ‘நல்லா கணக்கு போடறவங்கள… பாட்டுபாட சொல்லாத’-னு சொல்றாருங்க. :)