அறம் செய விறும்பு.

5.25. மற்றவர்களுடன் கருத்து வேறுபாடுகளோ, வழக்குகளோ வந்தால், கருத்து வேறுபாடு கொண்டவர்களிடமே பேசி உடன்பாடு செய்துகொள்ளுங்கள். வழக்கென்று போகும்பொழுது நீங்கள் நடுவரிடம் ஒப்படைக்கப்படுவீர்கள். நடுவர் உங்களை காவலிடம் ஒப்படைக்க, நீங்கள் சிறையில் அடைக்கப்படுவீர்கள்.

5.26. உங்கள் கையில் இருக்கும் கடைசி காசு தீரும்வரை அங்கிருந்து வெளியேற முடியாது.

5.29 உங்கள் வலது கண் உங்களைப் பாவத்தில் விழச்செய்தால் அதைப் பிடுங்கி எறிந்து விடுங்கள். உங்கள் உடல் முழுவதும் நரகத்தில் எறியப்படுவதைவிட உங்கள் உறுப்புகளில் ஒன்றை நீங்கள் இழப்பதே நல்லது.

5.30 உங்கள் வலது கை உங்களைப் பாவத்தில் விழச் செய்தால் அதையும் உங்களிடமிருந்து வெட்டி எறிந்து விடுங்கள். உங்கள் உடல் முழுவதும் நரகத்திற்குச் செல்வதைவிட உங்கள் உறுப்புகளில் ஒன்றை நீங்கள் இழப்பதே நல்லது.

5.39 உங்களுக்குச் தீமை செய்பவரை எதிர்க்க வேண்டாம். மாறாக, உங்களை வலக் கன்னத்தில் அறைபவருக்கு மறுகன்னத்தையும் திருப்பிக் காட்டுங்கள்.

5.44 உங்கள் பகைவரிடமும் அன்பு கொள்ளுங்கள்.

6.1 மக்கள் பார்க்க வேண்டுமென்று அவர்கள்முன், உங்கள் அறச் செயல்களைச் செய்யாதீர்கள்.

6.2 நீங்கள் தர்மம் செய்யும்போது உங்களைப்பற்றித் தம்பட்டம் அடிக்காதீர்கள்.

6.3 நீங்கள் தர்மம் செய்யும்போது, உங்கள் வலக்கை செய்வது இடக்கைக்குத் தெரியாதிருக்கட்டும்.

6.8 நீங்கள் கேட்கும் முன்னரே உங்கள் தேவைகளை இறைவன் அறிந்திருக்கிறார்.