குமரேசன் இல்லவே இல்லை. (Another Poison Tree)

ஒரு சினிமால பார்த்திபன், ரம்பா பணியாரம் சாப்டறதப் பாத்து, விவேக்ட சொல்ற ‘புதுக்கவிதை’..

‘ஒரு
ஸ்வீட் ஸ்டாலே
ஒரு
ஸ்வீட் ஸ்டாலே ( ரெண்டு தட சொல்லணும்ல!! )
பணியாரம்
சாப்பிடுகிறதே!!!’ ;)

இது மாதிரி.. எனக்கு ரொம்ப பிடிச்ச வில்லியம் ப்லேக் (William blake)-ன் ‘A poison tree’ பாடலைத் தழுவி.. நான் எழுதின ‘புதுக்கவிதை’ :) ( or ‘புதுவசனம்’ or எப்டி வேணாலும் சொல்லலாம்..) இங்கே..

குமரேசன் இல்லவே இல்லை.
————————————————————————-
கணேசனிடம் ஒருநாள் கோபம் கொண்டேன்
வந்த கோபத்தை அவனிடம் சொல்ல,
வழித்தடமின்றி காணாமல் போனது.

குமரேசனிடம் ஒருநாள் கோபம் கொண்டேன்.
(ஆனால்) வெளிப்படுத்த எனக்கு விருப்பம் இல்லை.

அன்றுமுதல்,

எந்தச் செயலை அவன் செய்தாலும்,
தவறாகவே என் கண்ணுக்குத் தெரிந்தது.
செயல்களில் உள்ள நிறைகளைத் தாண்டி,
சிறிய குறைகளும் பெரிதாய் தெரிந்தன.

நிறைகளை நினைக்க நிமிடமும் நேரமில்லை.
குறைகளை பூதமாக்கி அடுத்தவருக்கும் காட்டினேன்.

சிறிய குறைகளின் நீங்கா நினைவுகள்,
(என்) கோப மரத்தின் வேர்களை வளர்த்தன.

கோப மரத்தின் விழுதினையெல்லாம்
அடுத்தவர் மனத்திலும் வேர்களாய்ப் பாய்ச்சினேன்.

குமரேசனுக்காக ஒரு குழியைப் பறித்தேன்.
நேரில் பார்த்து சிரித்தபோதெல்லாம்,
குழியின் ஆழத்தை அதிகப்படுத்தினேன்.

ஒற்றைக்காலில் கொக்கைப்போல
சரியான பொழுதிற்கு காத்துக் கிடந்தேன்.
வந்த வாய்ப்பை வசமாய்ப் பயன்படுத்தி
பலமாய் அவனைப் படுகுழியில் தள்ளினேன்.

இன்று..
கணேசன் என் நண்பனாக உள்ளான்.
குமரேசன் இல்லவே இல்லை.