மகாகவிக்கே சிவலோகம் இல்லை.

இறந்தபிறகு சொர்க்கம் போவோம். வைகுந்தம் பொவோம்-னெல்லாம் சொல்றவங்கள பித்த மனிதர்-னு மகாகவி பாரதியாரே சொல்றாருங்க. அவரப் பொருத்தவரைக்கும் சிவலோகம்-னு ஒன்னு இல்ல-ங்கறாரு.

மகாகவி பாரதியார் பாடிய பாடல்.
ஒவ்வொரு நான்கு வரிக்கு முன்னும் நான் பிரித்துப் படித்த விதத்தையும் எழுதுகிறேன்.

சங்கு

(செத்தபிறகு சிவலோகம் வைகுந்தம்
சேர்ந்திடலாம் என்றே எண்ணியிருப்பார்
பித்த மனிதர், அவர் சொ(ல்)லும் சாத்திரம்
பேய் உரையாம் என்று இங்கு ஊதேடா சங்கம்! )

செத்தபிறகு சிவலோகம் வைகுந்தம்
சேர்ந்திடலாம் என்றே எண்ணியிருப்பார்
பித்த மனிதர், அவர் சொலும் சாத்திரம்
பேயுரையாம் என்றிங்கு ஊதேடா சங்கம்!

(இத்தரை மீதினிலே இந்த நாளினில்
இப்பொழுதே முக்தி சேர்ந்திட நாடிச்
சுத்த அறிவு நிலையில் களிப்பவர்
தூயராம் என்றிங்கு ஊதேடா சங்கம்! )

இத்தரை மீதினி லேயிந்த நாளினில்
இப்பொழுதே முக்தி சேர்ந்திட நாடிச்
சுத்த அறிவு நிலையிற் களிப்பவர்
தூயராம் என்றிங்கு ஊதேடா சங்கம்!

(பொய்யுறு மாயையைப் பொய் எனக் கொண்டு,
புலன்களை வெட்டிப் புறத்தில் எறிந்தே
ஐயுறல் இன்றிக் களித்திருப்பார் அவர்
ஆரியராம் என்றிங்கு ஊதேடா சங்கம்! )

பொய்யுறு மாயையைப் பொய்யெனக் கொண்டு,
புலன்களை வெட்டிப் புறத்தில் எறிந்தே
ஐயுறல் இன்றிக் களித்திருப்பார் அவர்
ஆரியராம் என்றிங்கு ஊதேடா சங்கம்!

(மையுறு வாள்விழியாரையும் பொன்னையும் (மையிட்ட வாள்போன்ற கூறிய கண்களால் மயக்கும் பெண்ணையும் பொன்னையும்)
மண்ணெனக் கொண்டு மயக்கற்று இருந்தாரே (தூசியாகக் கருதி மயக்கமில்லாமல் இருந்தாரே )
செய்யுறு காரியம் தாமன்றிச் செய்வார் (செய்யும் காரியங்களை ‘தாம்’ என்ற அகந்தை இல்லாமல் செய்வார்)
சித்தர்களாம் என்றிங்கு ஊதேடா சங்கம்!)

மையுறு வாள்விழியாரையும் பொன்னையும்
மண்ணெனக் கொண்டு மயக்கற் றிருந்தாரே
செய்யுறு காரியம் தாமன்றிச் செய்வார்
சித்தர்களாம் என்றிங்கு ஊதேடா சங்கம்!

இந்த உலகத்தில், இத்தரை மீதினில், இந்த நாளில், இப்பொழுதே முக்தி அடைந்திட எண்ணி, சுத்த அறிவு நிலையில் களிக்கும் மக்களே தூயவர்கள் என்று ஊதச்சொல்கிறார் சங்கை. சுத்த அறிவுநிலையில் இருப்பதாக நடிக்காமல் அதில் மகிழ்ச்சிகாணும் மக்களைப் போற்றி ஊதச்சொல்கிறார்.

சங்க நீங்க ஊதறீங்களா?? இல்ல நான் ஊதட்டுமா?? :)