ஏழு நல்ல பழக்கங்கள். (‘Seven habits of Highly Effective People’ )

ஏழு நல்ல பழக்கங்கள்.

சின்ன வயசுலருந்து “நல்ல விஷங்கள தெரிஞ்சுகோடா.. நல்ல பழக்கங்கள கத்துகோடா/வளத்துகோடா”-னு அம்மாவும் பாட்டியும் சொல்லி சொல்லி…. முப்பதாவது வயசுல நல்ல பழக்கம்-னா என்ன-னு படிக்க ஆரம்பிச்சிறுக்கேன். : )

சமீபத்துல ‘seven habits of highly effective people’-ங்கற புத்தகம் படிச்சேன். சிறந்த ‘ஏழே ஏழு’ பழக்கங்கள் பத்தி முன்னூறு பக்கங்களுக்கும் மேலாக விரிவாக எழுதியிருக்கிறார் ஆசிரியர் கோவெ (Covey). பலதரப்பட்ட வாசகர்களுக்காக எழுதியதுனால எல்லாவற்றையும் மிகவும் விரிவாக விளக்கி இருக்கிறார். மேலும், சில பகுதிகளில், சில கருத்துகளின் முக்கியத்துவத்தை உணர்த்துவதற்காகவும், ஆழத்தை அதிகப்படுத்துவதற்காகவும், ( புத்தகத்தின் பக்கங்களை அதிகப்படுத்துவதற்காகவும் : ) ) ஆசிரியர், சொன்ன கருத்துகளையே வெவ்வேறு விதமாக மீண்டும் மீண்டும் சொல்லியிருக்கிறார். சில வாக்கியங்கள் நான்கு ஐந்து வரிகளை தாண்டியும் தொடர்கின்றன. வாக்கியத்தின் இறுதிக்கு வருவதற்குமுன், வாக்கியத்தின் ஆரம்பத்தில் படித்தது மறந்து விட்டது. ஆசிரியரே மீண்டும் மீண்டும் சொன்னது போக, நானும் மீண்டும் மீண்டும் படித்து புரிந்துகொள்ள வேண்டியதாயிற்று. தூக்கம் வந்த நேரம் போக மீதி நேரத்துல படிச்சதுலயும், தெரிந்துகொள்ள வேண்டிய விஷயங்கள் நிறையவே இருந்தன என்பது உண்மை.

இந்த புத்தகத்திலிருந்து நான் கற்றவைகளை பகிர்ந்து கொள்வதற்காகவும், நானே மீண்டும் படிக்க நினைக்கும்போது தமிழில் படிக்க சுலபமாக இருக்கும் என்பதற்காகவும், இங்கு அவற்றை தமிழில் எழுதுகிறேன்.

Pages: 1 2 3 4 5 6 7 8 9