சின்னச் சின்ன வார்த்தைகள்.

சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க
சொல்லிற் பயனிலாச் சொல்.

பொருள் : நாம் பேசும்பொழுது யாருக்காவது ஏதாவது பயனளிக்கும் விஷயங்களை மட்டும் பேசவேண்டும். யாருக்குமே பயனளிக்காத விஷயங்களை விஷயங்களை பேசுவ பேசாதீர்கள்.

நம்ம சொல்ற சின்ன வார்த்தைகூட செலபேருக்கு பெரிய பலமா இருக்கலாம். அதேமாதிரி, சில வார்த்தைகள் பெரிய தடங்களா ஆயிடலாம், மன வருத்தத்த ஏற்படுத்திடலாம். நம்ம சொல்ற வார்த்தைகள் பயன் தருதா? இல்ல பாதகமாகுமா-னு பாத்து சொல்லணுங்க. கோவத்துல சொல்ற வார்த்தைகள் பெரும்பாலும் பயனில்லாத சொற்களாதாங்க இருக்கும்.
எப்பவும் இல்லன்னாலும், கோவமா இருக்கும்போதாவது வார்த்தைகள கவனிச்சு பேசணுங்க.