சிரிப்பே சிறப்பு!!!

இடுக்கண் வருங்கால் நகுக அதனை
அடுத்தூர்வது அ.·.தொப்ப தில்.

பொருள் : துன்பம் வரும்பொழுது சிரி. துன்பத்தைப் போக்குவதற்காண வழிகளில், சிரிப்புக்கு இணையான இன்னொன்று இல்லை.

துன்பம் வரும்போது சிரி-ன்னா, அடுத்தவருக்கு ஒரு துன்பம் வரும்போது அவரப் பாத்து சிரிக்கறது இல்லங்க!! :) துன்பம் வரும்போது, அந்தத் துன்பத்தயேப் பாத்து சிரிக்கறது. எப்போ துன்பத்தப் பாத்து பயப்படாம, ‘தில்’லா சிரிக்கிறோமோ, அப்போவே துன்பத்தப் போக்கறதுக்காண சக்தி பாதி வந்துடுது, போக்கறதுக்காண வழி ஈசியா தெரிங்சுடுங்க.