சுனாமி.. சுனாமி..

வெள்ளத் தனைய இடும்பை அறிவுடையான்
உள்ளத்தின் உள்ளக் கெடும்.

பொருள் : அறிவுடையவர்களுக்கு வரும் துன்பம், வரும்பொழுது பெரிய சுனாமி வெள்ளம்போல் வந்தாலும், அதை எதிர்கொள்ளும் வழிகள் பற்றி அவர்கள் நினைக்கும் பொழுதே பலமிழந்து விடுகிறது.

நமக்கு வர்ற துன்பத்தைப் பாத்து பயப்படும்போதுதாங்க துன்பம் இன்னும் பெருசாகுது. எப்போ ‘எப்படி சமாளிக்கறது’-ன்னு யோசிக்க ஆரம்பிக்கிறோமோ, அப்போவே துன்பத்தோட பலம் பாதி போய்டுச்சுங்க.