சத்தான சாப்பாடு vs அதிகமான சாப்பாடு.

அற்றால் அளவறிந்து உண்க அ.·.துடம்பு
பெற்றான் நெடிதுய்க்கும் ஆறு.

பொருள் : உணவு உண்ணும் பொழுது உடலுக்கு ஒவ்வாத உணவுகளைத் தவிர்த்தும், ‘தேவையான அளவு மட்டும்‘ உட்கொண்டும் இருந்தால், நீண்ட நாட்கள் ஆரோக்யமாக வாழ முடியும்.

நாம சாப்பிடும் பொழுது, தேவையான அளவோட நிறுத்தறோமா?? சுவைக்காக, இன்னும் ரெண்டு இட்லி, இன்னும் ரெண்டு தோசை, இன்னும் கொஞ்சம் சாம்பார் சாதம்-னு அடுக்கிட்டே போறோம்.
உடல் பலத்துக்கும் சாப்பிடுற சாப்பாட்டோட அளவுக்கும் தொடர்பு இருக்கறதா தப்பா நெனச்சுட்டு இருக்கோங்க. சத்தான சாப்பாடு சாப்பிடணுமே தவிர அதிகமான அளவு இல்லயே!!.
அப்படி அளவறிஞ்சு சாப்டா ஆரோக்யமா நீண்டநாள் வாழலாம்-னு வள்ளுவரே சொல்றாருங்க.