ஆட்டம் பாட்டம்.

இன்பத்துள் இன்பம் விழையாதான் துன்பத்துள்
துன்பம் உறுதல் இலன்.

பொருள் : இன்பம் வரும்பொழுது ஆட்டம் போடாதவர்கள் (‘ஆடம்பரம் மற்றும் அகந்தை’யில் குதிக்காதவர்கள்), துன்பம் வரும்பொழுதும் துவண்டு போய் விடுவதில்லை.

கைல நாலு காசு வந்துட்டா சிலபேர் ஆடற ஆட்டம் தாங்க முடியாதுங்க. மத்தவங்க யாரையும் மதிக்கமாட்டாங்க. நெறைய நண்பர்கள சேர்த்துப்பாங்க. ஒரே ஆட்டம்தான். அதேபோலதான் சிலருக்கு அதிகாரம் வந்துட்டா தலகால் புரியாம ஆட்டம் போடுவாங்க. காசோ, அதிகாரமோ போனப்புறம் அவங்க இருக்கற இடம் தெரியாம காணாம போய்டுவாங்க. அதுக்கப்புறம் அவங்களுக்கு நண்பர்கள்-னு யாரும் இருக்கமாட்டாங்க.

காசு வந்தாலும் அதிகாரம் வந்தாலும் ஆட்டம் போடாதவங்களுக்கு, துன்பம் வரும்போது அத தாங்கிக்கற, எதிர்கொள்ற சக்தி இருக்கும்-ங்க. எந்த துன்பம் வந்தாலும் அவங்க துவண்டு போகமாட்டாங்க!!