வாய்ச்சொல்லில் வீரன்?

சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்
சொல்லிய வண்ணம் செயல்.

பொருள் : எதையும் வாயால் சொல்வது எல்லோருக்கும் மிகவும் எளிமையானது. ஆனால் சொன்னபடி நடப்பது மிகவும் கடினமானது.

நடமுறைக்கு ஒத்துவராத விஷயங்கள ரொம்ப வெவரமா பேசரவகங்களப் பாத்து ‘வாயாலயே கோட்ட கட்றான் பாரு’-னு எங்க ஊர்ல சொல்லுவாங்க. ‘வாய்ச்சொல்லில் வீரன்’ அப்படி-னு பாரதியார்கூட சொல்லுவாரு. அது மாதிரி, ‘நான் அதப் பண்ணுவேன், இதப் பண்ணுவேன்’-னெல்லாம் வெரும் வார்த்தைல ரொம்ப பேர் சொல்லுவாங்க. ‘நடைமுறைல செய்’-னு சொன்னா ‘ஜகா’ வாங்கிடுவாங்க. வாக்குறுதிகளையும் அறிவுரைகளையும் வழங்கறதுக்கு ஆயிரம் பேர் இருப்பாங்க. ஆனா, சொன்னபடி நடந்து காட்ற செலபேர மட்டும்தான் வரலாறு ஞாபகம் வெச்சுகுது.

அதுசரி.. நாம எப்டி?? :)