துன்பத்துக்கே துன்பம்.

இடும்பைக்கு இடும்பை படுப்பர் இடும்பைக்கு
இடும்பை படாஅ தவர்.

பொருள் : தமக்கு வரும் துன்பத்தைக் கண்டு அஞ்சாதவர்கள், அவர்களுக்கு வந்தத் துன்பத்துக்கே துன்பம் அளித்துவிடுகிறார்கள்.

துன்பம் வந்தாலும் பயப்படாம தைரியமா இருக்கணும்-னு வள்ளுவர் சொல்றாரு. ஆனா, செலபேர் இருக்காங்க, துன்பம் வர்றதுக்கு முன்னாடியே பயப்படுவாங்க. இப்படி ஆய்டுமோ, அப்படி ஆய்டுமோ-னு நெனச்சு நெனச்சே அவங்களுக்கு பிபி(BP) ஏறிடும். தான் பயப்படறது இல்லாம தன்னச்சுத்தி இருக்கறவங்களிடமும் பயத்தப் பரப்புவாங்க.

நமக்கு வற்ற துன்பத்தப் பாத்து பயப்படாம இருந்தாலே அதை எதிர்கொள்ற வழிகள பத்தி யோசிக்க முடியுது. யோசிச்சு செயல்வடறவங்களுக்கு வர்ற துன்பம், துன்பப்பட்டு ஓடத்தானங்க செய்யும்!!??.