மறதியும்கூட நல்லதே!!

நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது
அன்றே மறப்பது நன்று.

பொருள் : ஒருவர் நமக்குச் செய்த உதவியை மறந்துவிடுவது நல்லதல்ல. அவரே நமக்கு ஒரு தீமை செய்துவிட்டால் அதை அன்றே மறந்துவிடுவது மிகவும் நல்லது.

பெரும்பாலான தமிழர் ரத்தத்துல ஊரிய விஷயம்ங்க, இந்த நன்றி மறவாமை. ‘உப்பிட்டவரை உள்ளளவும் நினை’-ன்னு ஔவையார் கூட சொல்லியிருக்காங்களே!!

ஒரு பேச்சுக்கு, நீங்க கிரிக்கெட் வெளயாடறீங்க-ன்னு வெச்சுக்கங்க. உங்க நண்பர் உங்கள கிளீன் போல்ட் பண்ணி அவுட் (out) ஆக்கிடறார்ன்னு வெச்சுக்கோங்க. அதுக்காக அன்னிலருந்து, உங்க நண்பர் மேல கோவிச்சுப்பீங்களா?? பேசாம இருப்பீங்களா?? இல்ல அன்னிக்கே அத மறந்துடுவீங்களா??
அன்னிக்கே மறந்துடுவீங்கதான!!

அதே மாதிரிதாங்க வாழ்க்கை. வாழ்க்கையும் ஒரு வெளயாட்டுதாங்க. ஒவ்வொரு நாள் நாம, நம்ப ‘சச்சின்’ சென்சுரி அடிக்கற மாதிரி, செய்யற காரியங்கள சூப்பரா செய்யறோம். சிலநாள் ஒன்னு, ரெண்டு ரன்ல அவுட் ஆற மாதிரி ஆயிடறோம். எப்பவும் நம்ம கூட இருக்கறவங்களே, நம்மள அவுட் ஆக்கிடறாங்க. அதுக்காக கோவப்படாம, அத அன்னைக்கே மறந்துடறதுதாங்க நல்லது. வாழ்க்கை வெளயாட்டுல, அன்னிக்கு நடந்த ஆட்டத்துலவேணா உங்கள அவுட் பண்ண முடியுமே தவிர, மொத்தமா அவுட் ஆக்க யாராலயும் முடியாதுங்க!!

யாரோ ஒரு வெளி ஆளு நமக்கு செய்யற ஒரு தீமைய அன்னிக்கே மறக்க முடியல-ன்னாலும், நம்மள சுத்தியிருக்கறவங்க, அம்மா, அப்பா, கணவன், மனைவி, நண்பர்கள், குழந்தைகள் மற்றும் நம்ப அன்புக்குரியவங்க, தெரிஞ்சோ, தெரியாமலோ செய்யற தீமைகள, அன்னிக்கே மறந்துடறதுதாங்க நல்லது.

என்ன மறந்துடுவோமா??