உன்னைக்கேளாய் நீயாரு!!

தேஸம் படத்துல வர்ற பாட்டு. A.R.ரகுமான் இசைல, ஹரிஹரனும், T.L. மகாராஜனும் பாடின பாட்டு!!

ஹிந்திப் பாடலுக்கு போடப்பட்ட tune-க்கு எழுதுன பாட்டுன்னாலும் சிறப்பா எழுதியிருக்காரு பாடலாசிரியர் வாலி.

எனக்கு பிடிச்ச இந்தப் பாட்ல இருந்து சில வரிகள்..

உன்னைக்கேளாய் நீயாரு
உன்னைக்கேளாய் நீயாரு
உண்மைக் கண்டார் யார்யாரு கூறாய்!!

உள்ளக்கண்ணால் நீ பாராய்!
உன்னை வென்று நீ வாராய்!!
பாதையெல்லாம் போகுமே சீராய்!!

அங்கங்கே மேடும் உண்டு!
அங்கங்கே பள்ளம் உண்டு!
அதைவெல்லும் உள்ளம் செல்லும் நேராய்!!
.
.
.
சோகங்கள் பொய்யடா!
சுமை நீக்கி வையடா!!
மனம் என்ற வீட்டை நீ
தினம் சுத்தம் செய்யடா!!!

நத்தைக்குள் முத்துபோல்
மரத்துக்குள் வித்துபோல்
உன் வாழ்க்கையென்பதும்
உள்ளத்தில் உள்ளதடா!!!
.
.
.
சோகங்கள் பொய்யடா!
சுமை நீக்கி வையடா!!
மனம் என்ற வீட்டை நீ
தினம் சுத்தம் செய்யடா!!!

நீ போகும் பாதையில்
பொய் யிருளைக் கொல்லடா
உண்மை ஜோதியேற்றி நீ
உலகை வெல்லடா!!!

அடுத்தத்தடவை கேட்கும்போது பாட்டு வரிகளை கவனிச்சுக் கேட்டுப்பாருங்க. உங்களுக்கும் பிடிக்கும்!!!