தேவையில்ல Pharmacy!!!

மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது
அற்றது போற்றி உணின்.

பொருள்: சாப்பிட்ட உணவு செரித்துவிட்டதா என்பதை அறிந்து, அப்படிச் செரித்தபின், மீண்டும் பசிக்கும்பொழுது சாப்பிட்டால், நமக்கு, உடல் நலக்குறைவுகளும் ஏற்படுவதில்லை, மருந்துகளும் தேவைப்படுவதில்லை.

இத நாம பலபேரு செய்யறதில்லங்க. எத்தன பேரு பசிச்சு சாப்டறோம்? காலைல காபி, கொஞ்ச நேரத்துல சாப்பாடு, ஒரு ரெண்டு மணிநேரம் கழிச்சு மீண்டும் காபி (அ) டீ. மதியம் பசிக்குதோ இல்லயோ சாப்பாடு. சாயந்திரம் சும்மா கொஞ்சம் ஸ்நாக்ஸ், காபி, டீ. திரும்பவும் நைட்டு ஒரு full கட்டு.

தாங்குமாங்க?? சாப்ட சாப்பாடு செரிச்சப்புறம் சாப்டாலே பாதி பிரச்சனை இல்லங்க!! :)