கடவுளே காப்பாத்து!!!

தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன்
மெய்வருத்தக் கூலி தரும்.

பொருள் : ‘கடவுளே காப்பாத்து’ என்று கடவுளை அழைப்பதால் நடக்காத செயல்கள்கூட, முயற்சியுடன் உழைப்பவர்களுக்கு வெற்றியைத் தேடித் தருகின்றன.

எங்க ஊர்ல ஒரு கத சொல்லுவாங்க. ஒரு ஊர்ல ஒரு பெரிய வெள்ளம் வந்துச்சாம். சுனாமி வந்த மாதிரி. வீடுகளல்லாம் அடிச்சுகிட்டு போய்டுச்சாம். இது மாதிரி வெள்ளம் அடிச்சுகிட்டு போனப்போ, ஒருத்தன் மட்டும் வீட்டு கூரைல உக்காந்திருந்தானாம். அந்த வழியா மரக்கட்டைகள பிடிச்சுகிட்டு போனவங்கள்லாம் ‘வாப்பா, இந்த கட்டையப் பிடிச்சுகிட்டு தப்பிச்சுடலாம்’-ன்னு கூப்டாங்களாம். ‘இல்ல இல்ல.. நீங்க போங்க. என்ன ‘சாமி’ காப்பாத்துவாரு’-னு சொல்லி அனுப்பிட்டானாம். அந்த வழியா வந்த பெரிய மரத் துண்டுகளையும் பிடிச்சுகிட்டு தப்பிக்காம உக்காந்திருந்தானாம்.
கடைசில யாருமே காப்பாத்தாம ‘மேல’ போய் சேந்துட்டானாம்.
அப்போ கடவுள்-ட்ட போயி ‘உன்ன நம்பிகிட்டு உக்காந்திருந்தேனே!! ஏன் ‘சாமி’ என்ன காப்பாத்தல?’-ன்னு கேட்டானாம்.

அதுக்கு கடவுள். ‘அட லூசே!! முதல்ல வந்து உன்ன கூப்பிட்டது நான். அப்புறமா அந்தப் பக்கமா மரத்துண்டுகள அனுப்பினதும் நான்தான். நீ எழுந்து அத பிடிச்சுக்காம, சும்மாவே உக்கார்ந்திருந்துட்டு நான் காப்பாத்தலன்னு சொல்றியேடா!!’-ன்னு சொன்னாராம்.

அதுமாதிரி, நாமலே முயற்சி எடுத்து உழைச்சாதாங்க சாமிகூட நமக்கு உதவி செய்வார்.

தலைவர் style-ல சொல்லணும்-னா. ‘நாம நம்மல பாத்துக்கிட்டாதான், கடவுள் நம்மள பாத்துக்குவாரு’

கடவுளாலேயே முடியாதது கூட முயற்சியோட ஒழைக்கறவங்களால முடியும்-னு வள்ளுவரே சொல்றாருங்க!!

அமேரிக்காக்கு போக விசா வாங்கறதுக்கு முன்னாடி, ஆந்திரா ‘விசா வினாயகருக்கு’ ஒரு தேங்கா ஒடைக்கணும்-னு சொல்றவங்கள என்னன்னு சொல்றது?? :)