ஈகோ.

கொன்றன்ன இன்னா செயினும் அவர்செய்த
ஒன்றுநன்று உள்ளக் கெடும்.

பொருள் : ஒருவர் நமக்கு மோசமான ஒரு துன்பத்தைச் செய்தாலும், அதற்கு முன்னர், எப்பொழுதாவது, அவர் நமக்கு செய்த ஒரேஒரு நல்ல விஷயத்தைப் பற்றி நினைத்துப் பார்த்தால், அவர் மீது எழும் கோபம் குறைந்துவிடுகிறது. அவர் செய்த துன்பத்தினால் ஏற்பட்ட ‘வலி’யின் வலிமையும் குறைந்துவிடுகிறது.

சொந்தக்காரங்களுக்குள்ள வர்ற சண்டைகள்-லாம் பாத்திருக்கீங்களா?? ஒன்னுக்குள்ள ஒன்னா இருப்பாங்க. திடீர்ன்னு ஒருநாள் சண்டை போட்டுப்பாங்க. அதுக்கப்புறம் ரெண்டு பேரும் பரம எதிரிகளா ஆய்டுவாங்க. கல்யாணம், திருவிழா-ன்னு, சந்திக்கிற வாய்ப்பு கடைக்கற எடத்துலல்லாம், ஒருத்தர் ரைட் சைடு போனா இன்னொருத்தர் லெப்ட் சைடு போய்டுவாங்க. ஒன்னா இருந்தப்போ அடுத்தவங்க செஞ்ச நல்லது எல்லாத்தையும் மறந்துடுவாங்க. அப்படியே ஞாபகம் வந்தாலும், அவர் செஞ்ச தீமை அதவிட பெருசா வந்து நல்லது எல்லாத்தையும் மறைச்சுடும்.

இன்னொருத்தங்க ஒரு தீமை செய்யும்போது மட்டும், அவங்க செய்த நன்மைய யோசிச்சுப் பாக்காம, அப்பப்போ மத்தவங்க நமக்கு செய்த நன்மைய, உதவியயெல்லாம் நெனைச்சுகிட்டோம்-னா, வேற ஒரு நேரத்துல, அவங்களே, தெரிஞ்சோ, தெரியாமலோ, நமக்கு ஒரு துன்பம் செய்யும் போது, அது ஒரு பெரிய பாதிப்ப ஏற்படுத்தாம இருக்கும்.

ஈகோ.
இந்த ஒரு குறள பத்திமட்டும் ஒரு புத்தகமே எழுதலாம் போலருக்கு. இருந்தாலும் இந்த ஒரு விஷயத்த மட்டும் சொல்லி முடிச்சிடறேன்.

Pages: 1 2