Amar Jawan!!!

இன்பம் விழையான் வினைவிழைவான் தன்கேளிர்
துன்பம் துடைத்தூன்றும் தூண்.

பொருள் : தன்னுடைய இன்பத்தைத் தேடாமல், தான் மேற்கொண்டுள்ள செயல்களில் வெற்றியைத் தேடும்குணமுடையவர்கள், தன்னைச் சுற்றியிருப்பவர்கள், நண்பர்கள், உறவினர்கள் மற்றும் நாட்டு மக்கள் ஆகிய அனைவரின் துன்பங்களை போக்குபவர்களாகவும், அவர்களைத் தாங்கும் தூண்போலவும் இருக்கின்றனர்.

தன்னோட லாபத்தப் பாக்காம, தான் செய்யற காரியத்துல கவனம் செலுத்தறவங்க யாருன்னு யோசிச்சுப் பாத்தேன். மொதல்ல ஞாபகத்துக்கு வந்தவங்க படை வீரர்கள்தாங்க. தன்னோட உயிரைப் பத்திக்கூட கவலைப்படாம தன் நாட்டுக்காக உழைக்கற அவங்க, நாட்டு மக்கள தாங்கற தூண்போலத்தானங்க!!

நம்ம காவல்துறை, அரசியல்வாதிங்க மாதிரி மக்கள் சேவை செய்யறவங்களும்(செய்யறதா சொல்றவங்களும்) அவங்க லாபத்துலயே குறிக்கோலா இருக்காம, ‘கொஞ்சம்’ கடமையையும் செஞ்சா நாடு சொர்க்கமா மாறிடாதா??

போர்ல வீர மரணம் அடைஞ்ச அமெரிக்க வீரர்களுக்கான சமாதி வாஷிங்டன் D C-ல இருக்கு. ரெண்டு மாசத்துக்கு முன்னாடி அங்க போயிருந்தேன். எவ்ளோ சமாதிகள். அவ்ளோ சமாதிகள ஒரே எடத்துல அப்போதான் பார்த்தேன்-னு நெனைக்கறேன். கண்ணு கலங்கிடுச்சு. உலகத்துல போரே இல்லாம இருக்க முடியாதா-ன்னு யோசிச்சுகிட்டே அவங்களுக்கு அஞ்சலி செலுத்திட்டு வந்தேன். எந்த நாட்டுக்காரங்களா இருந்தாலும் ‘உயிர்’ உயிர்தானங்க!!

வீட்டுக்கு வந்து இந்தியாவுக்காக உயிர்த்தியாகம் செஞ்ச வீரர்களோட நினைவிடம் ‘அமர் ஜவான்’ படத்த google-ல தேடி, அஞ்சலி செலுத்தினேன்.


Amar Jawan


Arlington National Cemetery