நீ நம்ம கச்சியா??

அஞ்சாமை ஈகை அறிவூக்கம் இந்நான்கும்
எஞ்சாமை வேந்தர்க்கு இயல்பு.

பொருள்: ஒரு நல்ல அரசருக்கு அல்லது அரசுக்குத் தேவை, பயம் இல்லாமை, அனைவருக்கும் உதவி செய்யும் குணம், நல்ல அறிவாற்றல், செயல்களை முன்னின்று செய்து வெற்றியை நோக்கி அழைத்துச்செல்லும் ஊக்கம் ஆகிய இந்த நான்கும் ஆகும்.

அரசியல்வாதிகளுக்கும் அரசாங்கத்துக்கும் இந்த பண்பெல்லாம் இருந்தா நல்லா இருக்கும்-ங்க.

வல்லரசு நாடுகளே எதிர்த்தாலும் பயப்படாம செஞ்ச நியூக்ளியர் சோதனை.
சுனாமி மாதிரி பேரழிவு ஏற்பட்டப்போ நம்ம நாட்டோட இல்லாம, பக்கத்து நாடுகளுக்கும் அள்ளிக் கொடுத்த ஈகை.
இரண்டு விண்வெளிக் களங்கள ஒரே நேரத்துல அனுப்பற அறிவாற்றல்,
பத்து வருஷத்துல நாட்ட வல்லரசா ஆக்கணும்-ங்கறதுல காட்ற ஊக்கம்.
இதெல்லாம் நல்ல அரசாங்கத்துக்கு அடையாளம்-ங்க.

வேற அடையாளங்களும் இருக்கு..

எந்தக் காரியம் பண்ணாலும், ‘மேலிடம்’ என்ன சொல்லுமோ-ங்கற ‘அஞ்சாமை’.
உதவி கேட்கறவங்ககிட்ட ‘நீ நம்ம கட்சியா??’ அப்படின்னு கேட்கற ‘ஈகை’.
சுனாமிய தடுக்க கடலுக்கே காங்க்ரீட் மூடி கட்ற மிகச் சிறந்த ‘அறிவாற்றல்’.
ஆங்கில போர்டுக்கெல்லாம் தார் அடிக்கிறல காட்ற சிறந்த ‘ஊக்கம்’.

இதெல்லாம் எதோட அடையாளம்?? :)