புத்தகம் வாங்கவே காசில்ல!!!

இன்மை ஒருவற்கு இளிவன்று சால்பென்னும்
திண்மை உண்டாகப் பெறின்.

பொருள்: மன உறுதியும், வெற்றிபெறவேண்டும் என்கிற துடிப்பும் அதிகமாகக் கொண்டவர்களுக்கு, இல்லாமை ஒரு குறையோ, இழிவோ இல்லை.

இந்த குறள ரெண்டு விதமா பாக்கலாங்க.
விதம் ஒன்னு: செலபேர பாத்திருக்கேங்க. அவங்களோட வேலைய ஒழுங்கா செய்யாம இருக்கறதுக்கு ஏதாவது ஒரு கொறைய காரணமா சொல்லுவாங்க.
உதாரணமா…
‘என்னப்பா, நல்லா படிக்கிறியா?’ ன்னு கேட்டா,
‘எங்க, புத்தகம் வாங்கவே காசில்ல’
‘எங்க, எங்க வீட்ல கரண்டே இருக்கறதில்ல’ அப்படின்னு எதாவது ஒன்ன கொறையா சொல்லுவாங்க.

‘என்னப்பா, இன்னிக்கு Excersice செஞ்சியா?’ ன்னு கேட்டா,
‘எங்க, இருக்குற வேலையே ரொம்ப அதிகமா இருக்கு. இதுல Excersice வேறயா?’ அப்படிம்பாங்க.

நல்லா படிக்கணும்-ங்கற துடிப்பு இருக்குறவங்களுக்கு, கரண்டோ, Excersice செய்யணும்-ங்கற துடிப்பு இருக்கறவங்களுக்கு, வேற வேலைகளோ ஒரு கொறையாவோ தடையாவோ இருக்க முடியுமா சொல்லுங்க??

விதம் ரெண்டு: செலபேரு அவங்க வீட்டு பொண்ணுக்கு மாப்பிள்ளை பாக்கும் போது, மாப்பிள்ள சாதாரண வேலைதான் பாக்கறாரு. 4000 ரூபாதான் சம்பளம் வாங்கறாரு. வாடகை வீட்லதான் இருக்காங்க. அப்படின்னெல்லாம் சொல்லுவாங்க. மாப்பிள்ளைக்கு வாழ்க்கைல உயரணும்-ங்கற எண்ணம் இருக்கா? வெற்றிபெறணும்ங்கற துடிப்பு இருக்கா அப்படின்னெல்லாம் பாக்க மாட்டாங்க.

மாப்பிள்ளை பாக்கும் போதும் பொண்ணு பாக்கும் போதும் மட்டும் இல்லங்க, பொதுவாவே, யாரையுமே, இன்னிக்கு அவங்க இருக்குற பொருளாதார நெலமைய வெச்சு கொறைவா எடைபோடக் கூடாதுங்க. வெற்றிபெறணும்ங்கற துடிப்பு இருக்குறவங்களுக்கு வெற்றியும் பணமும் எந்த நேரத்துலயும் வரலாங்க.